இலங்கைக்கு கடத்த முயன்ற மஞ்சள் பறிமுதல்

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே காரங்காடு கடற்கரையில் இருந்து சமையல் மஞ்சள் மூடைகளை இலங்கைக்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ராமநாதபுரம் கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் சம்பவ இடம் விரைந்த போலீசார், பதுக்கி வைத்திருந்த சமையல் மஞ்சள் 93 மூடைகளை பறிமுதல் செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்த இருந்த நாட்டுப்படகு, கடத்தல் கும்பலை கடற்கரை கிராமங்களில் கியூ பிரிவு போலீசார் தேடி வருகின்றனர். கைப்பற்றிய இரண்டரை டன் மஞ்சள் மதிப்பு ரூ. 16 லட்சம் என போலீசார் தெரிவித்தனர்.