வந்தே பாரத் திட்டத்தின் சிங்கப்பூரில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 156 பேர் அழைத்து வரப்பட்டனர்

கொரோனா தாக்கத்தால் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களை மீட்டு அழைத்து வருவதற்காக மத்திய அரசால் நடைவெடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்நிலையில் சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் நேற்று இரவு மதுரை விமான நிலையத்திற்கு 156 பயணிகளுடன் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்து வரப்பட்டனர்.இதனையடுத்து மதுரைக்கு வந்த புலம்பெயர் தொழிலாளர்கள் 156 பயணிகளுக்கும் மதுரை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனையை சுகாதாரத்துறை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டது.தொடர்ந்து அவர்களை அரசு பேருந்துகள் மூலம் அவரவர்கள் சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்து அங்கு அவர்களை தனிமைப்படுத்துதல் முகாமில் தங்க வைக்கப்பட உள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image