வாடிப்பட்டி ஒன்றிய அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

சோழவந்தான் அருகே நாராயணபுரத்தில் வாடிப்பட்டி ஒன்றிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஒன்றிய செயலாளர் ராஜன் ஏற்பாட்டின் பேரில் நடைபெற்றது. மதுரை புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் மேலூர் சரவணன் தலைமை வகித்தார். மண்டல பொறுப்பாளர் உமாதேவன், எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில செயலாளர் டேவிட் அண்ணாதுரை சிறப்புரை ஆற்றினார்கள். பொதுக்குழு உறுப்பினர் ரிஷபம் ராமநாதன், சோழவந்தான் நகர செயலாளர் வழக்கறிஞர் சத்யபிரகாஷ், வாடிப்பட்டி பேரூர் செயலாளர் மதன் வரவேற்றார்கள். மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் செல்வராஜ், மாவட்ட கழக நிர்வாகிகள் எம்ஜிஆர் இளைஞர் அணி வீரமாரி பாண்டியன், விவசாய பிரிவு முல்லை சக்தி, மீனவர் அணி முனைவர் பாலு, தகவல் தொழில்நுட்ப பிரிவு ரஜினி பிரபு அருவுக ராஜா, தேவி ,சுமதி, மேலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சோமாசி, வாடிப்பட்டி ஒன்றிய கழக நிர்வாகிகள் இணைச்செயலாளர் சின்னமருது, துணைச் செயலாளர், மீனாட்சி சுந்தரம் பொருளாளர் கிருஷ்ணன், பிரதிநிதி முத்து காமாட்சி, செல்லத்துரை மற்றும் நிர்வாகிகள் இளைஞர் பாசறை ராஜேஷ், பிடிஆர் பாண்டியன், திரவியம், அய்யனார் ,சசி, முருகன், மகேஸ்வரன், இந்திரா காந்தி, அருணா, பூமாதேவி மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய கழக நிர்வாகிகள், பேரூர் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..