உசிலம்பட்டி பகுதியில் தொடர் சாரல்மழையால் காளிபிளவர் விளைச்சல் பாதிப்பு.; விவசாயிகள் கவலை.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான குப்பணம்பட்டி வாலாந்தூர், சொக்கத்தேவன்பட்டி, கன்னியம்பட்டி போன்ற பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் காளிபிளவர் பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர். காளிபிளவர் பயிர்களை விவசாயிகள் கடந்த 50 நாட்களுக்கு மேலாகபயிரிடப்பட்டு பயிர்களை பாதுகாத்து வருகிறார்கள். இந்நிலையில் உசிலம்பட்டி பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தொடர் சாரல் மழை பெய்து வருகிறது. இந்த சாரல் மழையால் தற்போது பயிரிடப்பட்டுள்ள காளிபிளவர் விளைச்சல் மிகவும் பாதிப்பபடைந்துள்ளது. காளிபிளவர் பூ பூக்கும் நேரத்தில் செடியின் நுனியில் மழை நீர் விழுவதால் பூக்கள் வைக்காமல் செடியிலேயே பூக்கள் உதிர்விடுகிறது. இதனால் விளைச்சல் பாதிப்படைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். சம்பந்தப்பட்ட வேளாண்மைதுறை அதிகாரிகள் பாதிப்படைந்துள்ள காளிபிளவர் பயிர்களுக்கு போதிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உசிலை சிந்தனியா

புனித ரமலான் வாழ்த்துக்கள்..