தமிழக வாடகை வாகன ஓட்டுனர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டி இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை:

தமிழக வாடகை வாகண ஓட்டுனர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டி இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. கொரோண தொற்றால் நமது மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கபட்டுள்ளது என்பதை நாம் அறிவோம். இதில் மிகவும் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களில் நமது வாடகை வண்டி ஓட்டுனர்களும் அடங்குவர். இதுவரை ஐம்பதிற்கும் மேற்பட்ட ஓட்டுனர்கள் பொருளாதார நெருக்கடியால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.தமிழக வாடகை வாகன ஓட்டுனர்களுக்கு தமிழக அரசு சார்பில் கொரோண ஊரடங்கு உத்தரவு காலங்களில் ரூ.1000/- மற்றும் மளிகை பொருட்கள் விதி எண் 110 பயன்படுத்தி 83,500 ஓட்டுநர்கள் தமிழகத்தில் பலன் பெற்றுள்ளனர். எனினும் தமிழகத்தில் ஆட்டோ, டாக்ஸி, சுற்றுலா வாகனங்கள், மிதமான கனரக வாகனங்கள் மற்றும் சரக்கு வாகன ஓட்டுனர்கள் சுமார் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஊரடங்கு உத்தரவு காலங்களில் பாதிக்கப்பட்டுள்ளனர்.தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ள சலுகைகள் தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் மட்டுமே பலன் பெற்றுள்ளனர்.மக்கள் பாதை இராமநாதபுரம் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பொறுப்பாளர் வீரக்குமார் கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

1. தமிழக வாடகை வாகன ஓட்டுனர்களுக்கு ரூ.15000/- வணிக வாகன ஓட்டுனர் உரிமத்தை அடிப்படையாகக்கொண்டு நிவாரணம் வழங்கிட வேண்டும்.

2. வாடகை வாகன உரிமையாளர்களுக்கு வாகனத்திற்கான கடன் மார்ச் மாதம் முதல் டிசம்பர் 2020 வரை கால அவகாசம் நீட்டிப்பது மற்றும் கூட்டு வட்டியை அறவே ரத்து செய்ய வேண்டும்.

3. வாடகை வாகன உரிமையாளர்களுக்கு பர்மிட் அடிப்படையில் ரூ.50000 முதல் ரூ.2 லட்சம் வரை வட்டியில்லா கடன் உதவி வழங்க வேண்டும். வாகனத்தை இயக்குவதற்கான தடை உத்தரவு காலங்களில் பழுதான வாகனங்களை சீர் செய்யவும் தொழில் மூலதனமாக செயல்படுத்துவதற்கு உதவும்.

4. பிரதம மந்திரி முத்ரா திட்டம் (புதிய தொழிலுக்காக) அல்லது அதன் வடிவத்தை திருத்தம் செய்து வாகன உரிமையாளர்கள் பலன் பெற மத்திய மாநில அரசுகள் காலதாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

5. மார்ச் மாதம் முதல் இயக்கப்படாத வாடகை வாகனங்களுக்கான சாலை வரியை ரத்து செய்தல் மேலும் மக்கள் பயணிக்கும் வாடகை வாகனங்களுக்கு ஓராண்டு சாலை வரி, வாகன புதுப்பிப்பு ரத்து செய்ய வேண்டும்.

6. ஓராண்டிற்கு மூன்றாம் நபர் காப்பீடு இலவசமாக வாடகை வாகனங்களுக்கு வழங்கப்படவேண்டும் மேலும் ஓட்டுனர்களுக்கு கொரோண தொற்று நோய்க்கான பிரத்தியேக காப்பீடு வழங்கவேண்டும்.

மேலும் இந்த இக்கட்டான காலகட்டத்தில் நமது வாடகை ஓட்டுனர்களின் வாழ்வாதாரத்தை காக்குமாறு கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

கோரிக்கை மனுவை இராமநாதபுரம் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பொறுப்பாளர் வீரக்குமார், இராமநாதபுரம் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன், போகலூர் ஒன்றிய பொறுப்பாளர் நாகராஜ், தன்னார்வலர் பிரவீன் ஆகியோர் வழங்கினர்.

கோரிக்கை மனுவிற்கான ஏற்பாடுகளை இராமநாதபுரம் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் சரவணக்குமார் செய்திருந்தார்.

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & @Amazon @Flipkart @Snapdeal