
தேனி மாவட்ட பெரியகுளம் தென்கரையில் நகராட்சி அலுவலகத்தின் எதிரே உள்ள பகுதியில் அருகே அருகே இரண்டு அரசு மதுபானக் கடைகள் இயங்கி வருகின்றது. கடந்த இரண்டு மாதங்களாக பெரியகுளம் பகுதியில் கொரோன நோய் தொற்று அதிகரித்ததின் காரணமாக கட்டுப்பாட்டு பகுதியாக உள்ளதால் அந்த இரண்டு கடைகளும் அடைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதில் ஒரு கடையை மாற்றம் செய்து அதனை பெரியகுளம்-வைகை அணைச்சாலையில் உள்ள ஒரு தனியார் இடத்தில் உள்ள கடைக்கு மாற்றம் செய்ய பெரியகுளம் தென்கரை பேரூராட்சி நிர்வாகம் இடம் பார்த்து ஏற்பாடுகளை செய்தனர். இந்நிலையில் அரசு மதுபானக் கடை வருவதை அரிந்த பெரியகுளம் நகராட்சி 13வது வார்டு பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பெரியகுளம் – ஆண்டிபட்டி சாலையில் இரவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அங்கு வந்த பெரியகுளம் தென்கரை காவல்துறையினர் சாலைமறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி மதுபானக்கடை வராது என உத்தரவாதம் கொடுத்ததை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டனர். இதனால் அந்த பகுதில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாதிக் பாட்சா நிருபர் தேனி மாவட்டம்
You must be logged in to post a comment.