விருதுநகரில் மின்சாரம் தாக்கி அஇஅதிமுக ஒன்றிய கவுன்சிலர் பலி…

விருதுநகர் முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவராகவும் தற்போது விருதுநகர் ஊராட்சி ஒன்றிய 12வது வார்டு கவுன்சிலராகவும் முருகேசன் இருந்து வருகிறார். இவர் விருதுநகர் அருகே நல்லமநாயக்கன் பட்டியில் வீட்டு தரையில் பதிக்கும் கல் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். வழக்கம்போல தொழிற்சாலைக்கு சென்றவர் அங்கு உள்ள மோட்டார் பழுது காரணமாக பழுது பார்ப்பதற்காக சென்றுள்ளார். மோட்டார் பழுது பார்த்து பின்பு மின்னிணைப்பு செய்யும்பொழுது மோட்டாரின் பாகங்கள் சரியாக இணைக்கப் படாததால் அதிகப்படியான மின்சாரத்தின் காரணமாக திடீரென பழுதான மோட்டார் தூக்கி எறியப்பட்டு அவருடைய முகத்தில் பலமாக அடித்து இதில் சம்பவ இடத்திலேயே முருகேசன் உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து கள்ளிக்குடி காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது அதைத்தொடர்ந்து காவல்துறையினர் உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் மேலும் இது குறித்து காவல்துறையினர் தொடர் விசாரணை செய்து வருகின்றனர்.

செய்தியாளர். வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image