சிவகாசி பகுதியில் காலை 6 மணி முதல் மதியம் 3 மணி வரை அனைத்து வணிக நிறுவனங்களும் செயல்படும் – வர்த்தக சங்கம் அறிவிப்பு..

சிவகாசி பகுதியில் கொரானா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் முதல் காலை 6 மணி முதல் மதியம் 3 மணி வரை அனைத்து வணிக நிறுவனங்களும் செயல்படும் என்று அறிவிப்பு.

தமிழகம் முழுவதும் கொரானா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரக்கூடிய நிலையில் பொதுமக்கள் எந்த ஒரு அச்சம் இல்லாமல் முகக் கவசம் அணியாமல் வெளியே சென்று வருகின்றனர்.

எனவே பொது மக்களின் நலன் கருதி சிவகாசி பகுதிகளில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களும் நாளை (07.07.2020 முதல் 19.07.20 ஞாயிற்றுக்கிழமை வரை காலை 6 மணி முதல் மதியம் 3 மணி வரை மட்டும் செயல்படும் என்று சிவகாசி வர்த்தக சங்கம் சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்பு அறிவிக்கப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image