மதுரை மாவட்டத்தில் தெருவில் சுற்றினால் அபாராதம் மாவட்ட நிர்வாகம் கடும் எச்சரிக்கை..

மதுரை நகரில் நடமாடுவோரில் பெரும்பாலோர் முகக் கவசம் அணிந்து வருகின்றனராம். ஆனால் தண்ணீர் லாரிகளின் ஓட்டுநர்களில் பெரும்பாலோர், இன்னமும் முகக் கவசம் அணிய தயக்கம் காட்டி வருகின்றனர்.இதுபோல, தெருக்களில் உள்ள சிறிய காய்கறிகள் வியாபாரிகள், மதுரை புறநகர் பகுதிகளான சோழவந்தான், சமயநல்லூர், தேனூர், திருவேடகம், செக்கானூரணி, கருப்பாயூரணி, வரிச்சூர், ஒத்தப்பட்டி, காளிகாப்பான் ஆகிய பகுதிகளில் பலர் இன்னமும் முகக் கவசம் அணிய தயங்குகின்றனராம்.இதை கட்டுப்படுத்தும் நோக்குடன், மதுரை மாவட்டத்தில் சாலையில் முகக் கவசம் இன்றி நடமாடியதாக, சுமார் 30 ஆயிரம் பேரிடமிருந்து, ரூ. 39 லட்சத்து 55 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக, மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image