Home செய்திகள் நல்ல எண்ணம் நம் மனதில் நாளும் வளர்ந்தால் “நாளை நமதே” என்ற தலைப்பில், வளரும் அறிவியல் லட்சிய நாயகன் பத்மஸ்ரீ டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை சிறப்புரை.

நல்ல எண்ணம் நம் மனதில் நாளும் வளர்ந்தால் “நாளை நமதே” என்ற தலைப்பில், வளரும் அறிவியல் லட்சிய நாயகன் பத்மஸ்ரீ டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை சிறப்புரை.

by mohan

எஸ்ஆர்எம், டிஆர்பி கல்வி நிறுவனங்கள் சார்பில் மாணவ மாணவிகளுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி 05.07.2020ல் இணைய வழி நடைபெற்றது. நாளை நமதே என்ற தலைப்பில் மயில்சாமி அண்ணாதுரையின் சிறப்புரை. வரம் கொடுக்கும் தேவதைகள் வந்த போது தூங்கினேன். வந்தபோது தூங்கி விட்டு வாழ்க்கை எல்லாமே இனி கரம் கொடுக்கும் வாய்ப்புகளை கைகளில் வீசினேன். உருவி வீசிவிட்டு காலம் எல்லாம் பேசினேன் என்ற நிலை உங்களில் யாருக்கும் வராது இருக்க இந்தப் பேச்சை கவனமாகக் கேளுங்கள். சூனியத்திலிருந்து பேரண்டம் தோன்றியது. அந்த பேரண்டத்தில் ஒரு சிறு பால்வெளியில் இன்னும் சிறியதாக உள்ள சூரிய மண்டலத்தில், மிக மிகச் சிறியதான இந்த பூமியில், ஒரு செவ்வியல் ஆரம்பித்து நீந்துவன ஊர்வன பறப்பன நடப்பன என்ற வளர்ந்த புழு பூச்சி பறவை மிருகம் என்ற உயிர்க் கூட்டத்தின் குலத்தில் தோன்றிய நிமிர்ந்து நடந்து, ஆதிமனிதர்கள் தொடங்கி இன்று இருக்கும் நீங்களும் நானும் பலப்பல பேராபத்துக்களை தேடிவந்த தலைமுறையின் அடையாளங்களான அவற்றில் இருந்து இதுவரை தப்பித்து விட்டோம். அமெரிக்கா ரஷ்யா இங்கிலாந்து இத்தாலி ஸ்பெயின் பிரான்ஸ் என பல முன்னேறி நாடுகளில் தத்தளித்துக் கொண்டிருப்பதை பார்க்கும் பொழுது நாம் இன்று வரை பத்திரமாக இருக்கிறோம் என்றால் அதற்கும் ஒரு காரணம் உண்டு. ஆம் வல்லரசுகளை அடக்கிய குறுகிய வல்லரசாக இந்தியா மெல்ல மெல்ல முயற்சித்துக் கொண்டிருக்கிறது.

இப்போது பணிரெண்டாம் வகுப்பு முடித்து கல்லூரியில் சேர காத்துக்கொண்டிருக்கும், நீங்கள் புதிதாக பிறக்கப்போகும் வல்லரசு இந்தியாவில் கல்லூரிகளில் நடக்கும் முதல் மாணவச் செல்வங்கள் உங்களை கண்ணும் கருத்துமாக பார்த்து மிகவும் பாதுகாப்பான முறையில் உங்கள் உடலுக்கும் உள்ளத்துக்கும் எந்த இடைஞ்சலும் வராமல் பார்த்து பக்குவமாக கல்லூரிகள் சேரும்படி உங்களுடைய பெற்றோர்களும் ஆசிரியர்களும் சமுதாயமும் அரசும் பார்த்துக் கொள்ளும் கவலையும் சஞ்சலமும் வேண்டாம். அவர்கள் சொல்லும் தனிமனித சுகாதாரம் நடை முறைகளை மட்டும் சரியாக பின்பற்றுங்கள் போதும். வீட்டுக்கு வெளியே விளையாட்டாக திரிவதை இன்னும் சில நாட்கள் தவிருங்கள். எல்லாம் சரியாக நடக்கும் இப்பொழுது கொஞ்சம் நெஞ்சம் நிமிர்ந்து உட்காருங்கள் கவனமாக கேளுங்கள். இன்றைய பொழுதை நாம் முறையாக கடத்தினால் நாளை நமதே. நல்ல எண்ணம் நம் மனதில் நாளும் வளர்ந்தால் நாளை நமதே. நல்ல சொற்கள் நயம்பட நாளும் உழைத்தால் நாளை நமதே. நல்ல செயல்கள் நலம் பல நாளும் செய்தால் நாளை நமதே.

இந்தப் பேரண்டத்தில் காரணம் இன்றி ஒரு அணுவும் அசையாது என்பது அறிவியல். உங்களின் பிறந்தநாளை ஊரெல்லாம் கொண்டாடவேண்டும் நாடே கொண்டாட வேண்டும் என்று எவ்வளவு பேர் இருக்கிறார்கள். உங்களிடம் ஆட்டோகிராப் ஊரெல்லாம் வேண்டி விரும்பிக் கேட்க வேண்டும் என்று எவ்வளவு விரும்புகிறீர்கள். உங்களின் வாழ்க்கை வரலாற்றை எதிர்காலத்தில் மற்றவர்கள் படிக்க வேண்டும் என்று எவ்வளவு பேர் விரும்புகிறீர்கள் என்று கேட்டால் நான் நான் என்று போக கொஞ்சம் கூச்சமாக இருந்தாலும் எல்லார் மனதிலும் அந்த ஆசைகள் உருவாக்க வேண்டும். என்றும் பசுமரத்தாணி போல பதிய வேண்டும் என்றும், அக்கினிக் குஞ்சாக அந்த விருப்பம் உங்கள் இதயத்தின் ஓரத்தில் லட்சியமாக உருவாக்க வேண்டும் என்பதையும், ரத்த நாளங்களிலும் நாடி நரம்புகளும் புத்துணர்வு உங்களை எப்படி நடத்த வேண்டும் என்பதையும் மனதில் வைத்து எனது உரையை எடுத்துச் செல்கிறேன் பொறுமையாக கவனியுங்கள். இந்த உரையை கவனிப்பவர் மனதில் அடுத்து வரும் இடங்களில் ஒருவித அது செடியாகி துளிர்த்து பூவும் கனியும் பூத்துக்குலுங்கும் விரிந்து விரிந்து வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இப்பொழுது நான் சொல்லப் போவதை நீங்கள் சரியான வழியில் அறிந்து அவ்வப்போது நினைத்துக் கொண்டால் ஒரு நாள் இது போன்று பல நூறு மாணவர்களிடம் உரையாற்ற உங்களை உயர்த்தும் கல்வி. கல்வி மட்டுமே ஒரு மனிதன் உயர்வுக்கு காரணம் என்றார் சுவாமி விவேகானந்தர். எனக்கு கோதவாடி கிராமத்தில் ஆரம்பித்த அந்தக் கல்வி தான் என்னை நிலவுக்கும் செவ்வாய்க்கும் கொண்டு சென்று இன்று உங்களிடம் பேச கொண்டுவந்துள்ளது. எனவே எனது சொந்த அனுபவத்தில் நான் சொல்வது அறிவை வளர்க்க கல்வி. கல்வி எங்கும் உதவும் கல்வி, நிலவுக்கும் போகும் கல்வி, நிலத்துக்கும் உதவும் கருவி கல்வி, வானம் கலக்கும் கல்வி. ஆக நாளைய நலமான வாழ்விற்கு நீங்கள் எந்த துறையை தேர்ந்தெடுத்தாலும் துறை சார்ந்த கல்வியும் வாழ்க்கைத் துணையாகவும் கல்வியும் மிக மிக முக்கியம் என்பதை உணருங்கள். இன்றைய காலகட்டத்தில் கல்வியைக் கற்று செல்வம் கை நிறையப் பெற்று வீட்டையும் நாட்டையும் எத்தனை கலகம் செய்ய விரும்புகிறோம். ஆனால் பூதாகரமாக நம் முன் தோன்றும் பல லச்சியங்கள் நாமே விரும்பியபடி நல்ல காரியங்களை நாம் சிறப்பாக செய்ய, நமது வளர்ச்சியும், நாட்டின் வளர்ச்சியை அடைகின்றன.

அச்சம் தவிர்க்கப்பட வேண்டும். பாரதி தனது புதிய ஆத்திச்சூடியில் அச்சம் தவிர் என்று எழுதினார். அச்சம் தவிர் தான் மனித வாழ்வின் பல பரிணாமங்களை பார்க்க முடியும் என்பதாக கூட எனது உள்ளுணர்வு சொல்கிறது. இன்று நாம் தவிர்க்க வேண்டிய அச்சங்கள் பலப்பல. பகல் கனவு என்பது பழைய மொழி. ஆனால் தான் வெற்றி காணவும் தனது நாட்டை வல்லரசாக்க கனவு காணுங்கள். அது தூங்கும் போது வரும் கனவு அல்ல, உன்னை தூங்க விடாமல் இருக்கச் செய்யும் கனவு என்று புதுமொழி சொன்னார் கலாம். எனவே அச்சம் தவிர்த்து கனவு காணுங்கள்.

மண்ணெண்ணெய் விளக்கில் படித்தேன். மாட்டுக் கொட்டகை ஒரு வருடம், செருப்பை இல்லா நடைப் பயணம். என் கல்வி எல்லாம் அரசுப் பள்ளியில்தான் இருந்தும் நிலவில் நீர் கண்ட எப்படி என்று பலர் கேட்டார் நான் சொன்னேன் அரசுப் பள்ளி பாழல்ல. இப்படி பள்ளிப் பாடங்கள் முதலாக வந்தாலும், அப்பா அவ்வப்பொழுது கூட்டிச் சென்று கேட்க வைத்த இலக்கிய மற்றும் அரசியல் மேடை பேச்சுகள் என்னை ஈர்க்க, மேடைப்பேச்சில் அச்சம் தவிர்க்க பள்ளியில் மேடைப் பேச்சுப் போட்டிகள் பந்தயங்கள் பின்னாளில் குழு தலைமை ஏற்க இந்த பங்களிப்புகள் எனக்கு பலன் கொடுத்தது. எனவே மேடைப்பேச்சில் அச்சம் தவிர். படிப்பு எனக்கு தாய்மொழியாம் தமிழில் தான். கல்லூரியில் இணைந்தார் கணிதம் கூட ஆங்கிலத்தில் இருந்தாலும் நான் கல்லூரியில் படித்த அந்த இளமைக்கால நாட்கள் மிக மிக இனிமையானது. அற்புதமான கடந்த 6 வருட கனவுலகில் பயணிக்க, அந்த அற்புத சூழலில் கல்லூரி சொல்லல நான் ஆங்கிலம் என்ற அச்சம் தவிர்த்து, கற்றுக்கொண்ட கல்வியால் தேர்வுகளில் கல்லூரிகளிலும் சிறப்பாக சேர்ந்து, இந்திய விண்வெளிக் கழகத்தில் சேர்ந்து, கனவு பணிசெய்து நிலவையும் செவ்வாய் கிரகத்தையும் ஏற்ற முதல் நாள் இந்தியாவில் நடத்திய குழுவின் தலைமை ஏற்ற பின் ஐநா சபையில் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சிக்காக 87 நாடுகளை உள்ளடக்கிய குழு ஒன்றுக்கு மூன்று ஆண்டுகள் தலைமை ஏற்று பணியாற்ற முடிந்தது. இதனால் நமது இளைஞர்களுக்கு நான் சொல்வது ஆங்கிலம் என்ற அச்சம் தவிர்.

அற்புதமான அந்த கல்லூரி வாழ்வை என்றும் இழந்துவிடாதீர்கள். நிலவு பயணத்திற்கு முன் அமெரிக்காவும் ரஷ்யாவும் ஜப்பானும் சீனாவும் நிறுவனங்களை மொத்தம் கிட்டத்தட்ட 70 முறை மேற்கொண்டிருந்தார். நிலவு ஒரு பாலைவனம் என்று விட்டுவிட்டார்கள். இந்தப் பின்னணியில் நாம் என்ன செய்துவிட முடியும் என்ற அச்சம் தவிர்த்து, அவர்கள் பயணித்த அதே பழைய நிலைமைக்கு புத்தாக்க நோக்கத்துடன் புதிய அறிவியல் கருவிகள் உடன் சென்ற நமது சந்திரயான்-1 தான் நிலவில் நீர் இருப்பதை கண்டறிந்து நிலவில் நீர் இருப்பு வரைபடத்தையும் தயார் செய்து வரலாறு படைத்தது. அதே மாதிரி முன்னேறிய நாடுகளில் 51 முறை செவ்வாய் கிரகத்தை வெற்றி கொள்ள முயற்சி வெறும் 30 முறை தான் வெல்ல முடிந்தது. அமெரிக்கா அவர்களின் ஐந்தாவது முயற்சி, ரஷ்யா தனது ஒன்பதாவது முயற்சிகள் ஜப்பானும் சீனாவும் இன்னும் வெல்லமுடியாத இலக்காக உள்ளது. செவ்வாய் கிரகம் இப்படி பெரிய நாடுகளுக்கு எடுத்துக் காட்டியது கிரகத்திற்கு செல்ல ஒரு அச்சமான சூழ்நிலை. அந்த அச்சம் தவிர்த்து நாம் அனுப்பிய மங்கள்யான் செவ்வாயை சுற்ற பாதையில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இந்திய அறிவியல் புதிய சரித்திரம் படைத்து புது ரத்தம் கண்டது. மேற்கண்ட இந்த விண்வெளிப் பயணத்தின் வெற்றிக்கு உழைத்த பலநூறு அறிவியலாளர்களில் 90% பேர் அரசுப் பள்ளிகளில் தாய்மொழியில் படித்தவர்களே. எனவே அரசுப் பள்ளியில் படிப்பது குறை என்றும் அச்சம் தவிர். தாய்மொழிக்கல்வி தவறு என்று அச்சம் தவிர்.

அறிவியல் ஆராய்ச்சிக்கு அமெரிக்கா ஐரோப்பா செல்ல வேண்டும் இந்தியாவில் அது முடியுமா என்று இருந்த பொழுது அச்சம் தவிர்த்து அப்துல் கலாம் படைத்த சாதனை தான் பொக்ரானில் அணிவகுத்து எல்லைகளில் அச்சம் தவிர்த்தது. இந்திய விண்வெளி ஆய்வில் பல நூறு பெண் அறிவியலாளர்கள் ஆண் அறிவியலாளர்களுக்கு இணையாக தலைமைப் பொறுப்பேற்று வளர்ந்திருப்பது, பெண்களால் சில செயல்கள் முடியுமா என்ற அச்சம் தவிர் என்று சத்தமாக செல்வதாக நான் உணர்கிறேன். ஸ்டீபன் ஹாக்கின்ஸ் என்று தொடங்கி நமது தங்கத்தமிழன் மாரிமுத்து வரை பலரும் தமது உடல் ஊனத்தை மனதால் வதக்கி வரலாற்றில் இடம்பெற்ற கதைகள் செல்வது உடல் ஊனம் என்ற அச்சம் தவிர். இப்படி வளரும் கொண்டு நான் செல்வது அச்சம் என்பது அடிமையின் சாயல். எனவே அச்சம் தவிர்.

அரசுப் பள்ளியில் படிக்க செல்ல அச்சம் தவிர். அன்னைத் தமிழில் அறிவியல் கட்ட அச்சம் தவிர். ஆன்றோர் சபையில் அழகாய் பேச அச்சம் தவிர். திறமைக்கு ஒன்றும் சிறப்புகள் உண்டு திறமைகளை வளர்ப்பது அச்சம் தவிர். ஆணும் பெண்ணும் சரிநிகர் என்பதால் பெண்ணே நீயும் அச்சம் தவிர். ஆண்மை எனது பெண்மையை காக்க அதில் அச்சம் தவிர். கருப்பு இருக்கும், வைரம் தான் கருப்பு என்ற அச்சம் தவிர். சாதியும் மதமும் புழக்கத்தில் இல்லை ஜாதி என்ற அச்சம் தவிர். இயந்திரங்களை இயக்கும் இயற்கையின் இடத்தில் அச்சம் தவிர். இருட்டில் வெளிச்சம் வழியைக் காட்டும் இருட்டில் நடக்க அச்சம் தவிர். பிறந்தவர் என்பது இயற்கையின் நியதி இருப்பின் கொண்ட அச்சம் தவிர். வீரமே தமிழனின் விரையமாகும் வீரியம் குறைந்து ஆய்வாளர்கள் அச்சம் தவிர். புதுமை என்பது சாபமல்ல உணர ஒரு முறை என்பதால் முதுமை என்பது அச்சம் தவிர் மூச்சிருக்கும் வரை முயற்சி என்பதால் முயற்சியே வந்தோம் தனியே செல்வோம் தனிமை என்பது அச்சம் தவிர். அனைத்தும் தெரிந்தவர் யாருமில்லை தெரியாதது அச்சம் தவிர். உலக உயிர்கள் அதற்கான கடமை உண்டு உன் கடமை செய்வதில் அச்சம் தவிர்.

காலை மதியம் மாலை என்று எல்லா நாட்களிலும் ஒன்றுதான். ஆயினும் நமது மகிழ்வை காட்ட நாம் கொண்டாடும் பொங்கல் தீபாவளி ரம்ஜான் கிறிஸ்துமஸ் போல, ஒவ்வொரு வகுப்பிலும் தேர்வுகள் இருப்பினும் அவை நாம் இதுவரை படித்ததை நாம் மகிழ்வாக எழுதிக் காட்ட. எனவே தேர்வில் என்று அச்சம் தவிர். நீங்கள் படித்த வகுப்பறை தானே உங்கள் தேர் வரையும், எனவே தேர்வரை என்ற அச்சம் தவிர் நீ படித்து என்ன உனக்கு தெரிந்தது என்ன என்று நீ எழுதி காட்டத்தானே தேர்வுத்தாள். எனவே தேர்வுத் தாளில் அச்சம் தவிர் தேர்வுத்தாள் கையில் வாங்கி கண்ணில் கொஞ்சம் விளக்கு பூசை முழுதாய் உள்ளே வாங்கி அப்பா அம்மா தான் தெய்வம் படித்த பாடம் ஒருங்கிணைத்து மெதுவாய் அச்சம் தவிர்த்து அங்கே கைகளில் இருக்கும் கேள்வித்தாளில் உனக்கு பதில்கள் தெரிந்த கேள்விகளை தேர்ந்தெடுப்பதில் அச்சம் தவிர். வெள்ளைத்தாளில் பேனா கொண்டு பதில் எழுதும் அச்சம் தவிர். தெளிவாய் தெரிந்தது எழுத அச்சம் தவிர். அனைத்து கேள்விகளுக்கும் பதில் எழுதிய பின் திரும்ப வரும்வரை பதில்களை படிக்க அச்சம் தவிர். தேர்வு எழுதிய பெறும் மதிப்பெண் பற்றிய அச்சம் தவிர். ஒவ்வொரு தேர்வும் வெற்றிக்கான ஒரு படிகள் என்பதால் சிகரம் தொடும் அந்தப் படிகளில் ஏற சிரமம் என்ற அச்சம் தவிர் தேர்வின் முடிவில் அச்சம் தவிர். உனக்குரிய மதிப்பெண்களை உங்கள் ஆசிரியர்கள் அள்ளிக் கொடுப்பார்கள். அடுத்த வருடம் நீங்கள் எல்லாம் அடுத்த வகுப்பில் கண்டிப்பாக வருவீர்கள். அங்கும் அச்சம் தவிர்த்து தடைகள் மேலே மேலே மேலே உயரங்கள்.

அப்படி நீங்கள் உயர்ந்த உயர்ந்த தொடப்போகும் சிகரங்கள் உங்களுக்காக காத்துக்கொண்டிருக்கின்றன. புறப்படுங்கள் செல்வங்களே புறப்படுங்கள். ஆழிப் பேரலையாய் புறப்படுங்கள். தேர்வுகள் தடைகள் அல்ல என்பதை உணருங்கள் அச்சங்கள் என்ற தேனீக்களுக்கு இடையில் பெற்ற மதிப்பெண்கள் எனும் தேன் பெறும். பாரம்பரியமிக்க இந்தியப் பெருநாடு உங்களுடைய திறமைக்கு கண்டிப்பாக சந்தர்ப்பங்களை உண்டாக்கி உங்கள் பின்புறத்தை விட நீங்கள் யார் என்பதை விட உங்கள் திறமைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இந்தியாவின் பல வெற்றியாளர்கள் கிராமங்களில் சாதாரண குடும்பங்களில் பிறந்து சாதாரண பள்ளி கல்லூரிகளில் அதுவும் தாய்மொழிகள் படித்தவர்கள் அதிகம் வென்றிருக்கிறார் என்பதை உணருங்கள். உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்ற வள்ளுவமும், கனவு காணுங்கள் என்றார் கலாம். நாளெல்லாம் வினை செய் நினைத்தது முடியும் என்றான் பாரதி. அதன்படி பெரிதாய் வாழும் நாளெல்லாம் உறுதிப்பாட்டுடன் உங்களின் வாழ்க்கை முறைகளை கல்லூரிகள் ஒவ்வொருவரும் எடுத்துச் செல்லுங்கள். ஒவ்வொரு மாணவனுக்கும் மாணவிக்கும் இடையே வேண்டுவது என்ன தெரியுமா நம்மால் முடியும் நம்மால் முடியும் என்ற அடிமனத்தில் காலத்துக்குள் விதைத்த ஆத்மார்த்தமான நம்பிக்கையுடன் முன்னெடுத்துச் செல்லும் காரியங்கள் வெற்றி பெறும். கல்லூரிகளையும் இந்த காலகட்டத்தில் உங்களுக்கு எல்லாம் மனதில் சரியாக பதிய வைத்துக் கொண்டு, அதற்கு ஒரு மிகப்பெரிய சான்று நமது மங்கள்யான் செவ்வாய் கோள்க்கான வெற்றிப்பயணம் முன்னேறிய நாடுகளில் பல வருடங்கள் முயன்று பல கோடி டாலர்கள் செலவு செய்து உருவாக்கிய பல பல செயற்கைக்கோள்கள். நான் முன்பே சொன்னபடி வெறும் 14 மாதங்களில் மற்ற நாடுகள் செய்த செலவில் பத்தில் ஒரு மடங்கு செலவு செய்து முழுக்க முழுக்க இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட மங்கள்யான் செயற்கைகோளை 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஐந்தாம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தி, அதன் நீண்ட நெடிய 60 கோடி கிலோமீட்டர் பயணத்தை அங்குல அங்குலமாக ஜெயித்திடுவோம் என்ற நம்பிக்கையும், அதற்கான முயற்சியில் சேர்த்து ஒரு நாளிதழில் 48 வாரங்கள் எழுதி, பல கோடி மனித மனங்களின் ஆவலையும் நம்பிக்கையும் ஒருங்கே விதைத்து, 2014ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி அதிகாலையில் நேரில் வந்து நமது இந்தியப் பிரதமர் எங்கள் பின்னர் பார்க்க தொலைக்காட்சி வழியே 120 கோடி இந்தியர்கள் நம்பிக்கையுடன் கவனிக்க செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட பாதையில் மங்கள்யான் நிலைநிறுத்தியது.

முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்தை அடைந்த முதல் நாடாக இந்தியா சரித்திரம் படைத்து, ஏழு ஆண்டுகளுக்கு மேலாக விண்ணிலும் செவ்வாய் கிரகத்தை சுற்றியபடி வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்புகூட ஒரு சிறு வரலாற்று நிகழ்வாக செவ்வாய் நிலவு ஒன்றை படம் பிடித்து பூமிக்கு அனுப்பி ஊடகச் செய்திகளில் இன்றும் இடம் பிடித்துள்ளது. அதற்கு மாறாக பத்து வருட உழைப்பால் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் உருவான சந்திரயான் 2 முழு வெற்றி அடையாது போனதற்கு காரணம் அதனுடைய எந்த நேரத்திலும் விக்ரம் லேண்டர் தோல்வியைத் தழுவலாம் என்ற பலரின் மனப்போக்கும் ஒரு காரணம் என்று பலராலும் பேசப்படும். நாளை நமது என்று தேவையான முயற்சி மற்றும் கடின உழைப்புடன் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை விதையை எப்பொழுது மனதின் அடித்தளத்தில் வைத்திருப்போம். தன்னால் என்ன முடியும் என்பது நினைப்பது, தான் பிறந்த வீடும் ஊரும், நல்ல தனது நேரமும், அப்பாவின் பணமல்ல, தலை விதியும் இல்லை, தான் பிறந்த தேதியை அல்ல, என்னாலும் முடியும் என்ற தனது மனம் மட்டுமே. கண்டு உணர வேண்டும் தனது பெயர் நிலைக்க நாட்டிற்கும் வீட்டிற்கும் நல்லது செய்ய ஒவ்வொரு நாளும் நமது மனது துடிக்கவேண்டும்.

மனிதனாய் பிறந்த நாம் எல்லாம் கடந்து, தான் தானும் சாதிக்க வேண்டும் என்ற உணர்வு கொப்பளிக்க வேண்டும். நமக்கு கொஞ்சம் அதிகமாக இருக்க வேண்டும். இன்று புதிதாக பிறந்ததாகவும், இன்றிலிருந்து இன்னும் இன்னும் அதிகம் செய்ய வேண்டும் என்பதாகவும், என்னுள் கூட ஒரு உத்தியாக மதிக்க உங்களுக்கு மட்டும் மூச்சு உள்ளவரை முயற்சி எடுக்க வேண்டும். முயற்சி என்பது தன்னையும் தனது குடும்பத்தையும் உயர்த்துவதாக இருக்கட்டும். அதன்படி வாழ்நாள் முழுமைக்கும் கற்பதும் கற்பிப்பதும் நல்லதை எண்ணி எண்ணி செய்தும் செய்தபடி சொல்லியும் எண்ணத்தால் சொல்லால் செயலால் மனிதனாக பயனுள்ள வாழ்க்கை வாழ வேண்டும். அதற்கான உறுதி ஒன்றை உங்கள் மனதில் கல்லூரிக்கு போகும் முன் வையுங்கள். செடியாக மரமாக இருந்து, தாங்கள் சான்றோனாக சரித்திரப் புத்தகங்கள் படிக்கும் பெரும்பாலான உலகத்தார் மத்தியில், சரித்திரம் படைத்த சான்றோர்க மதிக்கும் சங்கரரும் விவேகானந்தரும் காந்தியும் கலாம் அவர்கள் பிறந்த அன்றே சான்றோர் என்ற நிலையில் பிறந்து இருக்கவில்லை. அவர்கள் வாழ்வில் ஒரு நாள் ஒரு காட்சி ஒரு மனிதன் ஒரு நிகழ்வு ஒரு சொல் அவர்களின் வாழ்க்கை தேசிய மாற்றியது. அதனால் வந்த அவர்களின் வாழ்க்கை எனக்கு அவர்களை சான்றோர்கள் ஆக்கியது. அப்படி ஒரு நிலை உங்களுக்கு இந்தத் தருணம் உண்டாகட்டும்.

நிறைவாக முகத்தில் புன்னகையுடன் கல்வி கற்றுத் தேர்ந்து அச்சம் தவிர்த்து, நாளை நமதே என்ற நம்பிக்கை வளர்த்து, தாயிற் சிறந்த கோயிலுமில்லை, தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை, அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம், எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும் என்று மாதா பிதா குரு வணங்கி வாழ்க்கையில் அடுத்த இடங்கள் உங்களின் எல்லா முயற்சிகளுக்கும் அவர்களின் ஆசீர்வாதம் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள். உங்கள் கல்லூரி வாழ்க்கையை ஆற அமர அனுபவித்து வென்று வாருங்கள் உலகம் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. நன்றி வணக்கம்.

தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com