எம்.பி.யின் கருத்தையும் அரசு ஏற்றுக் கொள்ளும்- அமைச்சர் ஆர்.பி

சனிக்கிழமை அன்று மதுரையில் நான் அளித்த பேட்டியில் மதுரையில் கொரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்க மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் கூறியுள்ளதை அரசு கவனத்தில் கொள்ளும் என்று மட்டுமே கூறினேன்.கொரோனா நோய்த் தொற்று குறித்து இறப்பு அதிகமாகவும், அதேபோல் இறந்தவர்களை பாதுகாப்பான முறையில் முறையில் கொண்டு செல்ல வில்லை என்று சமூக ஊடகங்களில் மக்களை அச்சுறுத்தும் வண்ணம் சிலர் வதந்திகளை பரப்பி தேவையற்ற பதற்றத்தை உருவாக்கிவருகின்றனர் அவர்கள் மீதுதான் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாம் கூறினேன் இதில்

எம் பி குறித்தோ அவர் தெரிவித்த கருத்து குறித்தோ நான் தவறாக எதுவும் கூறவில்லை. இன்றைக்கு மதுரை மாவட்டத்தில் இந்த கொரோனா தொற்றுநோய்க்காக சிறப்பான முறையில் முதலமைச்சர் வழிகாட்டுதல்படி மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகம் செய்துள்ள அனைத்து நடவடிக்கைகளை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.வெங்கடேசன் நேரில் சென்று ஆய்வுசெய்து பார்வையிட்டுக் கொள்ளலாம் அப்படி அவர் பார்வையிட்டால் இந்த அரசை நிச்சயம் அவர் பாராட்டுவார் என்று அவர் கூறினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image