
சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழந்த சம்பவம் கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு சிபிசிஐடி விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கிட வலியுறுத்தி மயிலாடுதுறையில் விடுதலைக் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அப்போது அப்பா மகனை அடித்துக் கொன்ற காவலர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்க வலியுறுத்தி முழக்கம் எழுப்பினார்.
நிகழ்ச்சியில் நாடாளுமன்றத் தொகுதி செயலாளர் கதிர் வளவன், மாநில துணை செயலாளர்கள் (இ.ச.பே)ஆயப்பாடி முஜிபுர் ரகுமான், ரியாஸ்கான், மாவட்ட இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை அன்புச்செல்வன், சங்கை நவீத், சங்கை சதக்கத்துல்லா, செம்பை ஒன்றிய து செயளாலர் பால்ராஜ், சங்கை ரியாஸ், ஒன்றிய செயலாளர் காளி ஆனந்த், ஒன்றிய அமைப்பாளர் செங்குட்டுவன், நகர செயலாளர் பிரபாகரன், ஒன்றிய துணைச் செயலாளர் ஜெய்சிங், வழக்கறிஞர் பிரிவு தினேஷ்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
இரா.யோகுதாஸ், மயிலாடுதுறை செய்தியாளர்.
You must be logged in to post a comment.