Home செய்திகள்கீழக்கரை செய்திகள் ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை..

ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை..

by ஆசிரியர்

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, தெற்கு ரயில்வே பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மதுரை கோட்ட மேலாளர் வி. ஆர். லெனின், தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர் ஆர்.ஜே.பாஸ்கர் ஆகியோரின் மேற்பார்வையில், மதுரை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கொரானா வைரஸ் பாதித்ததாக சந்தேகப்படுவோரின் சிகிச்சைக்காக தனியாக மருத்துவ படுக்கைகள் அரசரடி இருப்புப்பாதை பணியாளர் பயிற்சி மையம், திருப்பரங்குன்றம் எந்திரவியல் தொழிலாளர் பயிற்சி மையம், திண்டுக்கல், திருநெல்வேலி ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் ஓய்வு அறைகள், விருதுநகர் போக்குவரத்து தொழிலாளர் பயிற்சி மையம், மதுரை ரயில்வே மருத்துவமனை ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ளன.

ரயில் பயணிகள் மற்றும் ரயில்வே ஊழியர்கள் ஆகியோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக விழிப்புணர்வு தகவல்கள் ரயில் நிலையங்களில் ஒலிபரப்பப்படுகின்றன. கொரானா வைரஸ் குறித்த விழிப்புணர்வு பிரச்சார சுவரொட்டிகள் அனைத்து ரயில் நிலையங்களிலும் விளம்பரப் படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு ரயில் நிலையங்களில் இந்த வைரஸ் பாதிப்பை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ரயில்வே மருத்துவர்கள், தமிழக அரசு மருத்துவ அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்து முக்கிய ஆலோசனைகள் பெற்றுக் கொண்டு வருகின்றனர். ரயில் நிலையங்கள், ரயில்களை சுத்தப்படுத்தும் பணியின் கால இடைவெளி கடைப்பிடிக்கப்படுகிறது. ரயில் பெட்டிகள் வாயில்களில் உள்ள கைப்பிடிகள், ரயில்வே ஓய்வு அறையில் உள்ள கதவு கைப்பிடிகள் ஆகியவை தொடர்ந்து சுத்தப்படுத்தப் படுகின்றன. ரயில் நிலையங்களில் மற்றும் ரயில்வே தொழிலாளர் பணியிடங்களில் அதிகமான கிருமி நாசினி கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளது.

‌ ‌

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!