Home செய்திகள்கீழக்கரை செய்திகள் தேசிய பத்திரிக்கையாளர் தினம் மதுரையில் கேக் வெட்டி கொண்டாட்டம்….

தேசிய பத்திரிக்கையாளர் தினம் மதுரையில் கேக் வெட்டி கொண்டாட்டம்….

by ஆசிரியர்

நாட்டின் ஜனநாயகத்தின் நான்காவது துாணாக கருதப்படும் பத்திரிகைகளின் பணி மிகவும் முக்கியமானது. செய்திகளை பாரபட்சமின்றி வழங்குவது, தவறு நடந்தால் சுட்டிக்காட்டுவது, சமூகத்திற்கு சரியான பாதையை வகுத்துக் கொடுப்பது எனது பல பொறுப்புகள் பத்திரிகை துறைக்கு உண்டு.

இந்தியாவில் ‘பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா‘ அமைப்பு 1966ஆம் ஆண்டு நவம்பர் 16ல் நிறுவப்பட்ட நிலையில் ஆண்டுதோறும் நவம்பர் 16ஆம் தேதி தேசிய பத்திரிகை தினமாக கடைபிடிக்கப்படுகிறது. பத்திரிகைகளின் சுதந்திரத்தை பாதுகாப்பது, அதன் செயல்பாடுகளை கண்காணித்தல், தொழில்முறை நெறிகளை கட்டிக்காத்தல் போன்றவற்றில் பிரஸ் கவுன்சிலின் முக்கிய பணியாற்றிவருகிறது.

இந்நிலையில் இன்றைய தினம் தேசிய பத்திரிக்கையாளர் தினம் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்டுவருகிறது. அதன்படி தேசிய பத்திரிகையாளர் தினத்தினை முன்னிட்டு மதுரை மாவட்ட செய்தி மற்றும் பத்திரிக்கையாளர்கள் சார்பில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள செய்தியாளர்கள் அறையில் கேக் வெட்டி கொண்டாட்டப்பட்டது. இதில் ஏராளமான செய்தியாளர்கள், பத்திரிக்கையாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் பங்கேற்றனர்.

இதனையடுத்து மூத்த செய்தியாளர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டு அனைத்து செய்தியாளர்களுக்கு கேக் வழங்கப்பட்டது. இதனையடுத்து மத்திய மாநில அரசுகள் பத்திரிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் பத்திரிக்கையாளர்கள் நலவாரியத்தை விரைந்து உருவாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

மதுரையில் இருந்து செய்தியாளர் வி காளமேகம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!