Home செய்திகள் சுரண்டை காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி

சுரண்டை காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி

by mohan

தென்காசி மாவட்டம் சுரண்டை காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு பற்றியும்,சாலை விபத்துகளை குறைக்கும் நோக்கிலும் அரசு வகுத்துள்ள சட்டங்கள் மற்றும் அறிவுறுத்தல்கள் பொதுமக்களை சென்றடையும் வகையில் ஹெல்மெட் அணிந்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.இந்த விழிப்புணர்வு பேரணியை காவல் ஆய்வாளர் மாரீஸ்வரி துவக்கி வைத்தார். மேலும் எஸ்.ஐ-க்களான உமா மகேஸ்வரி, ஜெயராஜ், கல்யாண சுந்தரம், எஸ்எஸ்ஐ செய்யது இப்ராகிம் மற்றும் காவலர்கள்,பொதுமக்கள்,ஆகியோர் ஹெல்மெட் அணிந்து மாடசாமி கோவிலிருந்து கிளம்பிய விழிப்புணர்வு பேரணி பஸ்ஸ்டாண்ட் ரோடு, மற்றும் முக்கிய சாலைகள் வழியாக தினசரி மார்க்கெட் வந்தடைந்தது.

பேரணியில் ஹெல்மெட் அணிவதன் அவசியம், ஹெல்மெட் அணியாமல் சென்றால் ரூ 1000 அபராதம், இரு சக்கர வாகனத்தில் இருவர் மட்டுமே பயணிக்க வேண்டும், சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டினால் ரூ 1000 அபராதம், மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ 10000 அபராதம், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டினால் ரூ 5000 அபராதம் மற்றும் சாலை விதிகளை மதிக்க வேண்டும் என்பது பற்றிய அறிவுறுத்தல்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.தொடர்ந்து ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டியவர்களுக்கு இனிப்பு வழங்கி பாராட்டப்பட்டு விழிப்புணர்வு பேரணி இனிதே நிறைவுற்றது.

செய்தியாளர்  அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!