100 மீ ஓட்டப்பந்தயத்தில் வரலாறு படைத்தார் டூட்டி சந்த்

இத்தாலியின் நாபோலியில் 30வது உலக பல்கலைக்கழக விளையாட்டுத் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை டூட்டி சந்த் (லேன் நம்பர் 4) 11.32 நொடிகளில் இலக்கை அடைந்து தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் உலக அளவிலான தொடரில் 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற வரலாற்றை அவர் படைத்தார்.

இதில் ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த Del ponte (11.33) இரண்டாமிடமும், ஜெர்மனியைச் சேர்ந்த Lisa KwaYie (11.39) மூன்றாமிடமும் பெற்றனர்.ஒடிசாவைச் சேர்ந்த டூட்டி சந்த் 100 மீட்டர் ஓட்டத்தில் தேசிய சாதனை (11.24 நொடிகள்) படைத்தவர் ஆவார். இவர் ஒரிசாவின் கலிங்கா பல்கலைக்கழக மாணவியாவார்.கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் 100 மீ மற்றும் 200 மீ பிரிவுகளில் வெள்ளிப்பதக்கம் வென்றிருந்தார்

கே.எம்.வாரியார்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image