உசிலம்பட்டி -அரசு பேருந்து மீது ஷேர் ஆட்டோ மோதி விபத்து ஒரு பெண் உள்பட 5 பேருக்கு காயம்..

உசிலம்பட்டி மலையாண்டி தியேட்டர் அருகே தேனியிலிருந்து மதுரை நோக்கி சென்ற அரசு பேருந்து மீது செல்லம்பட்டியிலிருந்து உசிலம்பட்டி நோக்கி வந்த ஷேர் ஆட்டோ மோதி விபத்து. மது போதையில் இருந்த ஆட்டோ ஓட்டுனர் ஆட்டோவை தாறுமாறாக ஓட்டியதில் ஆட்டோ கவிந்து இழுத்துச் செல்லப்பட்டு அரசு பேருந்தில் மோதி நின்றதாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த வாகைக்குளத்தைச் சேர்ந்த நித்யா என்ற பெண் உள்பட கொங்கபட்டி ராமன், ஒயிண்டாபட்டி பழனி, வளங்காங்குளம் கட்டத்தேவன் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் முத்துராமன் உள்ளிட்ட 5 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அவர்களை உசிலம்பட்டி அரசு மருத்துவமணைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். மேலும் உசிலம்பட்டி நகர் பேலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..