Home செய்திகள்கீழக்கரை செய்திகள் அய்யாகண்ணுவுக்கு தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு கடும் கண்டனம்.. வீடியோ செய்தி..

அய்யாகண்ணுவுக்கு தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு கடும் கண்டனம்.. வீடியோ செய்தி..

by ஆசிரியர்

அய்யாகண்ணு-அமித்ஷா சந்திப்பு குறித்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில் கடந்த 5 ஆண்டுகளாக பிரதமர் மோடி தலைமையிலான அரசு விவசாயிகளுக்கு விரோதமாக கொள்கை முடிவு எடுத்து செயல்பட்டு வருகிறது.

கடன் தள்ளுபடி, விலை நிர்ணயம் செய்வதை ஏற்க மாட்டோம் என பாராளுமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் கொள்கை முடிவாக அறிவித்தது. விவசாயிகளை சந்தித்து பேசவே மோடி மறுத்தார்.குறிப்பாக தமிழக விவசாயிகளை எதிரியாகவே பார்க்கிறார்.

கஜா புயல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் சொல்லக் கூட மனமில்லாத பிரதமர் மோடியின் மனிதநேயமற்ற செயலை மூடிமறைத்து விவசாயிகளின் வாக்கு பெறுவதற்காக பாஜக தலைவர் அமித்ஷா அழைப்பில் அய்யக்கண்ணு தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நள்ளிரவில் சந்தித்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இது தமிழக விவசாயிகளுக்கு செய்த மிகப் பெரும் துரோகம் மட்டுமல்ல பெருத்த அவமானத்துடன் கூடிய தலைக்குனிவை ஏற்படுத்தி விட்டார். இவரது போராட்டத்தில் பங்கேற்ற, ஆதரவளித்த, விவசாயிகள், அரசியல் கட்சியினரை அவமதித்து விட்டார்.

அய்யாகண்ணுவின் சந்திப்பின் மர்மம் என்ன? சந்திக்கும் நிர்பந்தம் எதனால் ஏற்பட்டது என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். தனது சுயநலத்திற்காகவும், சுய விளம்பரத்திற்காகவே தொடர்ந்து அய்யாக்கண்ணு செயல்படுவதை வன்மையாக கண்டிக்கிறேன் என்றார். அப்போது திருவாரூர் மாவட்ட செயலாளர் சேரன் சு. செந்தில்குமார்,செய்திதொடர்பாளர் என்.மணிமாறன் உடனிருந்தனர்.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!