Home செய்திகள்கீழக்கரை செய்திகள் இராமநாதபுரத்தில் வெளிநாட்டு பணம், லேப்டாப், கடிகாரங்கள் பறிமுதல்..

இராமநாதபுரத்தில் வெளிநாட்டு பணம், லேப்டாப், கடிகாரங்கள் பறிமுதல்..

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் கூறியதாவது: நாடாளுமன்ற லோக் சபா பொதுத் தேர்தலையொட்டி ராமநாதபுரம் மாவடத்தில் வரை பறக்கும்படை, நிலைத்த கண்காணிப்பு குழு அலுவலர்கள் வாகன சோதனையிட்டுள்ளனர். கடந்த 3 நாட்களில் உரியஆவணங்களின்றி எடுத்துச் சென்ற ரூ.43,26,850 மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதில் ரூ.15,09,850 இந்திய பணம், ரூ.28.17 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணம் அடங்கும். ரூ.7.60 லட்சம் மதிப்பில் மடிக்கணினி, கை கடிகாரங்கள் உள்ளிட்ட பொருட்களும் ஆவணங்களின்றி பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கீழக்கரை பகுதியில் மேற்கொண்ட வாகன சோதனையின்போது உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென் 50 ஆயிரம் சிங்கப்பூர் டாலர், 10 ஆயிரம் மலேசியன் ரிங்கட் (இந்திய மதிப்பில் ரூ.28.17 லட்சம் மதிப்பு) ரூ.1 லட்சம் இந்திய பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கஸ்டம்ஸ், வருமானவரி துறை மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பறிமுதல் செய்த பணம், பொருள் குறித்து சம்பந்தப்பட்ட நபர்களுக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கப்பட்டு, மாவட்ட கருவூலத்தில் செலுத்தப்படும். சம்பந்தப்பட்ட நபர் உரிய ஆவணங்களை 7 நாளில் சமர்ப்பித்து ஆய்விற்கு பின் பறிமுதல் செய்த தொகை உரியரிடம் மீண்டும் வழங்கப்படும். உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கத் தவறினால் சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்கு பதிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

வங்கிகளில் ரூ.10 லட்சத்திற்கு மேல் பரிவர்த்தனை செய்யப்படும் வங்கி கணக்குகள் குறித்து வருமானவரித் துறையிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். முதன் முறை வாக்காளர்கள், மாற்றுத்திறன், வாக்காளர்கள்,மூத்த குடிமக்கள் என அனைத்து தரப்பு வாக்காளர்கள் வாக்களிக்க ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் மூலம் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை ஆகியோர் உடனிருந்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!