Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கச்சத்தீவில் இந்திய-இலங்கை பக்தர்கள் கொண்டாடிய புனித அந்தோணியார் தேவாலய திருவிழா நிறைவு..

கச்சத்தீவில் இந்திய-இலங்கை பக்தர்கள் கொண்டாடிய புனித அந்தோணியார் தேவாலய திருவிழா நிறைவு..

by ஆசிரியர்

285 ஏக்கரிலான கச்சத்தீவு, ராமேஸ்வரத்தில் இருந்து 12 கடல் மைல் தூரம், இலங்கை நெடுந்தீவில் இருந்து 8 கடல் மைல் தொலைவு பாக் ஜலசந்தி கடற்பரப்பில் அமைந்துள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து இரண்டரை மணி நேரம், இலங்கையின் நெடுந்தீவு மற்றும் தலைமன்னாரில் இருந்து ஒன்றரை மணி நேரத்திலும் கச்சத்தீவை அடையலாம்.

கடலில் இயற்கைச் சீற்றம், புயல் மற்றும் பேராபத்து காலங்களில் காப்பாற்றவும், பெருமளவு மீன் கிடைக்கவும் மீனவர்கள் வழிபாடு நடத்திய பின்னரே கடலுக்குள் செல்வது வழக்கம். ராமேஸ்வரம் ஓலைக்குடா அந்தோணிப்பிள்ளை, தொண்டி சீனிக்குப்பன் ஆகியோரால் 1913-இல் கச்சத்தீவில் சிறிய ஓலைக் குடிசையில் புனித அந்தோணியார் ஆலயம் நிறுவப்பட்டது.

அதன்பின் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தவர்களின் தவ காலத்தில் பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் அந்தோணியார் ஆலய விழா நடைபெற்று வருகிறது.. இந்திய–இலங்கை நாட்டு மக்கள் இணைந்து கொண்டாடும் புனித அந்தோணியார் திருவிழா இன்று மாலை 4 மணியளவில் தொடங்கியது.

யாழ் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானபிரகாசம் கச்சத்தீவு ஆலய கொடியை ஏற்றி திருவிழாவை தொடங்கி வைத்தார். நெடுந்தீவு பங்குத்தந்தை எமில் பவுல், ராமேஸ்வரம் பங்குத் தந்தை தேவசகாயம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கச்சத்தீவு செல்ல ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் தமிழக பக்தர்கள் குவிந்தனர். கச்சத்தீவு செல்ல விண்ணப்பித்தோருக்கு ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் மூலம் சிறப்பு அடையாள அட்டை, மீன்வள துறை சார்பாக கடல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கச்சத்தீவு செல்லும் ஒவ்வொருவருக்கும் ‘லைஃப் ஜாக்கெட்’ ( பாதுகாப்பு கவசம்) வழங்கப்பட்டது.

உணவுப் பண்டங்கள், விழா செலவிற்கு சிறிதளவு பணம் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டனர். மது, சிகரெட் உள்ளிட்டபோதை பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. கச்சத்தீவு செல்லும் இந்திய பக்தர்களின் பாதுகாப்பிற்காக இந்திய கடற்படையின் கப்பல், கடலோர காவல் படையின் ஹோவர் கிராப்ட் படகுகள் ஈடுபடுத்தப்பட்டன. இலங்கை கடற்படை கப்பல்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு அதிகளவில் சிங்கள பக்தர்கள் கலந்து கொண்டதால் சிங்கள மொழியில் திருப்பலி நடத்தப்பட்டது. சிங்கள திருப்பலியை காலே மறை மாவட்ட ஆயர் ரேமண்ட் விக்ரமசிங்கே நடத்தினார். இதனை தொடர்ந்து கொடியிறக்கம் நடைபெற்று விழா முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து இரு நாட்டினரும் அவரவர் நாடு திரும்பினர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!