தர்மபுரியில் அமமுக தலைவர் தினகரன் சிறப்பு பேட்டி..

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சிறிய கட்சி கட்சியைப் பார்த்து திமுக பயப்படுகிறது அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுசெயலாளர் டிடிவி தினகரன் தர்மபுரி மாவட்டத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேட்டி.தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என்ணேகொல் புதூர்  நீர் திட்டத்தை செயல்படுத்த கோரியும் செயல்படுத்த தமிழக அரசை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

இதனைத் தொடர்ந்து பாலக்கோடு மல்லாபுரம் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன்.திமுக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற சிறிய கட்சியைப் பார்த்து பயப்படுகிறது.திமுக தலைவர் ஸ்டாலின் தற்போது கிராமசபை கூட்டம் நடத்தி வருவது அவர் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது கிராமம் கிராமமாக சென்று மக்களுக்கு தேவை என்னவென்று மக்களுக்கான குடிநீர் பிரச்சனை சாக்கடை வசதி போன்றவை உள்ளதா என மக்களிடம் கேட்டு பிரச்சனைகளை தீர்த்து வைப்பது விட்டு விட்டு தற்போது நமக்கு நாமே பயணம் போல காமெடி செய்து கொண்டிருப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்தார்.

திருவாரூர் தேர்தலில் திமுக தலைவர் மறைந்த கருணாநிதி 63 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் இந்த நிலையில் திமுக திருவாரூர் தேர்தலை கண்டு பயப்படுவது ஏன் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பினார்.தன்னைப் பற்றி அவர்கள் பத்திரிகையான முரசொலியில் தாக்கி எழுதி வருவதாகவும் இவர்கள் ஜெயலலிதா எம்ஜிஆர் காமராஜர் பெரியார் இவர்கள் அனைவரையும் தாக்கி எழுதியவர்கள். குடும்ப அட்டைகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவது குறித்த கேள்விக்கு மக்கள் பணத்தை அவர்கள் வழங்குகிறார்கள்ஏற்கனவே ஆர் கே நகரில் 6,000 ரூபாய் வழங்கி அவர்கள் வெற்றி பெறவில்லை ஆயிரம் ரூபாய் வழங்கினார் வெற்றி பெறப் போகிறார்கள் இவர்கள் பத்தாயிரம் ரூபாய் வழங்கினார் கூட வெற்றி பெற மாட்டார்கள் என்றார்.நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கடந்த மூன்று மாதங்களாக சில கட்சிகள் கூட்டணி பற்றி பேசி வருவதாகவும் விரைவில் தேர்தல் அறிவிக்கும்போது கூட்டணி பற்றிய அறிவிப்பை வெளியிடுவோம் என்றும் கூட்டணி முழுமை பெறவில்லை என்றாலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தன்னந்தனியாக நின்று இனி வரும் தேர்தலை சந்திக்கும் என டிடிவி தினகரன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

செய்தி:- சிங்காரவேலு, தர்மபுரி

சத்திய பாதை மாத இதழ் ..

சத்திய பாதை மாத இதழ் ..

சத்தியம் வந்தது… அசத்தியம் அழிந்தது..