முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணிதவியல் சங்கம் நிகழ்ச்சி…

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணிதவியல் சங்கம் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியினை கணிதவியல் முதலாமாண்டு மாணவி J.நூருல் ஃபாசிலா இறைவணக்கத்துடன் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் Dr. A.R.நாதிரா பானு கமால் வரவேற்புரை வழங்கினார். அத்துடன் சிறப்பு விருந்தினர் B.தேன்மொழி M.Sc., M.Sc., M.Phil. செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி கணிதவியல் இணை பேராசிரியை முகம்மது சதக் நிறுவனத்தின் சார்பாக நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, “உலகத்தை கணிதம் என்ற மொழியினை வைத்து கடவுள் படைத்தார்” என்ற கலிலியோவின் கூற்றுடன் துவங்கி கணித வளர்ச்சியினை வாழ்க்கையோடு ஒப்பீட்டு நகைச்சுவை உணர்வோடு சிறப்புரையாற்றினார். கணிதவியல் சங்கத்தின் சார்பாக நடைபெற்ற போட்டிகளில் பங்கு பெற்ற மாணவிகளுக்கு பரிசளித்து, சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இறுதியாக கணிதவியல் துறைத்தலைவர். திருமதி. G.குணவதி நன்றியுரை வழங்க இந்நிகழ்வு இனிதே நிறைவுற்றது.

Be the first to comment

Leave a Reply