Home செய்திகள் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் சி.கே.டி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 20வது ஆண்டு விழா… அமைச்சர்கள் பங்கேற்பு..

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் சி.கே.டி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 20வது ஆண்டு விழா… அமைச்சர்கள் பங்கேற்பு..

by ஆசிரியர்

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் சி.கே.டி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 20வது விளையாட்டு விழா மற்றும் 20வது பள்ளி ஆண்டு விழா 05.01.2019 மற்றும் 06.01.2019 ஆகிய 2 நாட்கள் நடைபெற்றது. 06.01.2019 அன்று நடைபெற்ற 20வது பள்ளி ஆண்டு விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் திரு.கே.ஏ.செங்கோட்டையன், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர்.செ.ராஜூ ஆகியோர் கலந்துகொண்டு கடந்த ஆண்டு நடைபெற்ற 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியில் முதல் 3 இடம் பிடித்த 09 மாணவ, மாணவியர்களுக்கு கேடயம், சான்றிதழ், புத்தகம் மற்றும் ரொக்கப்பரிசினை வழங்கி பாராட்டினார்கள். விழாவில் முன்னாள் அமைச்சர் திரு.சி.த.செல்லப்பாண்டியன் திருநெல்வேலி – தூத்துக்குடி மாவட்ட ஆவின் தலைவர் திரு.சின்னத்துரை அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர்.செ.ராஜூ பேசியதாவது:- புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 2011ம் ஆண்டு முதலமைச்சராக இருந்தபோது தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்ற வேண்டும் என்றால் அனைவரும் கல்வி பெற வேண்டும் என்பதற்காக பள்ளி கல்வித்துறைக்கு சுமார் ரூ.ஒரு இலட்சத்து இருபத்தி ஐந்தாயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து பல திட்டங்களை செயல்படுத்தினார்கள். மேலும் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள், பள்ளி கல்வித்துறை மூலம் 14 வகையான கல்வி உபகரணங்கள் வழங்கி மாணவர்கள் பள்ளிக்கு வருகையை அதிகரிக்க செய்தார்கள். மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா நீட் தேர்வினை தமிழகத்தில் செயல்படுத்திட எதிர்ப்பு தெரிவித்தார்கள். தமிழகத்திலும் நீட் தேர்வினை நடத்திட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. நீட் தேர்வினை கண்டு மாணவää மாணவியர்கள் அச்சம் ஏற்படக்கூடாது என்பதற்காக மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசு தமிழகத்தில் 412 பயிற்சி மையங்களை துவக்கப்பட்டு சிறப்பான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் 12 அரசு பள்ளிகளில் பயிற்சி மையங்கள் துவக்கப்பட்டு மாணவ, மாணவியர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. ஏழை மாணவ, மாணவியர்களுக்கு தங்குமிடம் வசதியுடன் நீட் தேர்வு மையம் 7 மாவட்டத்திற்கு ஒரு மண்டல அளவில் அமைக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கோவில்பட்டியிலும் மண்டல அளவிலான மையம் நேஷனல் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், பொதுத்தேர்வில் மாணவää மாணவியர்கள் மதிப்பெண் அடிப்படையில் ஏற்படும் மனஅழுத்தத்தினை போக்கிடும் வகையில் தரவரிசை (கிரேடு) செயல்படுத்தப்பட்டது. பொதுத்தேர்வில் மாணவ, மாணவியர்கள் பெற்ற மதிப்பெண்கள் தெரிந்துகொள்ளும் வகையில் குறுஞ்செய்திகள் அனுப்பப்படுகிறது என பேசினார். விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் திரு.கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது: புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்கள் தான் பெறாத கல்வியை தமிழகத்தில் உள்ள மாணவ, மாணவியர்கள் பெற வேண்டும் என்பதற்காக சத்துணவு திட்டத்தினை செயல்படுத்தினார்கள். இதன்மூலம் பள்ளிக்கு வருகை தரும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு, ஏழை, எளிய மாணவர்களுக்கு ஏற்படும் பசியினை போக்கிடும் வகையில் உணவு வழங்கினார்கள். மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கோட்டையில் கொடி ஏற்றியதுடன் ஏழைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்கி காட்டுவேன் என்ற சபதத்தை ஏற்று, தான் பெற்ற சிறந்த கல்வியை மாணவ, மாணவியர்கள் பெற வேண்டும் என்பதற்காக பள்ளி கல்வித்துறை மூலம் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தார்கள். மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவியர்களுக்கு மிதிவண்டி, சீருடைகள், பாட புத்தகங்கள், மடிக்கணிணி உள்ளிட்ட 14 வகையான கல்வி உபகரணங்கள் வழங்கி சிறந்த கல்வி பெற வழிவகை செய்தார்கள். அரசு பள்ளிகளில் பயிலும் 8ம் வகுப்பு, 9ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மினி மடிக்கணிணி வழங்க மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கல்வித்துறைக்கு தனி தொலைக்காட்சி துவங்கப்படவுள்ளது. இதன்மூலம் கல்வி தொடர்பான பாடங்கள் மாணவர்களுக்கு ஒளிபரப்பப்படும். வரும் 21ம்தேதி முதல் அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு எளிதில் கிடைக்கும் வகையில் திறன் மேம்பாட்டுடன் கூடிய கல்வி வழங்கப்பட்டு, வேலைவாய்ப்பு கிடைத்திட அரசு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 1, 6, 9 மற்றும் 11ம் வகுப்பில் படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டு சிறந்த பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை மாணவர்கள் யூ டியுப் மூலம் மீண்டும் படிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அண்ணா நூலகத்தில் இருந்து சிறந்த ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை காணொலி காட்சி மூலம் 1000 பள்ளிகளில் ஒரே நேரத்தில் பார்த்து படிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதுபோன்ற பல்வேறு திட்டங்கள் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசு செயல்படுத்தி அனைவரும் கல்வி பெற உறுதுணையாக இருந்து வருகிறது. எனவே, மாணவர்கள் அரசின் திட்டங்கள் அனைத்தும் பெற்று வாழ்வில் நல்ல நிலையை அடைய வேண்டும் என பேசினார்.

நிகழ்ச்சியில் திருநெல்வேலி – தூத்துக்குடி மாவட்ட மீனவ கூட்டுதறவு இணைய தலைவர் திரு.சேவியர், முதன்மை கல்வி அலுவலர் திரு.முருகேசன், அருப்புக்கோட்டை ஸ்ரீராமலிங்கா மில்ஸ் சேர்மன் திரு.டி.ஆர்.தினகரன், சென்னை கம்மவார் அறக்கட்டளை சேர்மன் திரு.ஆர்.ஆதிநாராயணன், செயலாளர் திரு.ஏ.ராமமூர்த்தி, குமாரகிரி சி.கே.டி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் திரு.டி.நம்மாழ்வார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.மோகன், திரு.சின்னப்பன், முக்கிய பிரமுகர்கள் திரு.அய்யாத்துரைபாண்டியன், திரு.விஜயபாண்டியன், திரு.ரமேஸ், திரு.ராமச்சந்திரன், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள்ழ கலந்துகொண்டனர்.

செய்தி:- அஹமது, தூத்துக்குடி

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!