கீழக்கரையில் தெரு நாய்கள் பிடிக்கும் பணி துவங்கியது…

கீழக்கரையில் இன்று வரை தீர்வு காணாத பிரச்சினைகளில் ஒன்று தெரு நாய்க்களின் பிரச்சினை. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் கோரிக்கைகள் வைக்கும் பொழுது நாய் பிடிக்கும் பணி சிறிது காலம் நடைபெறும், பின்னர் முழுமையடையாமலே நிறைவடைந்து விடும்.

அதே போல  இம்முறையும்  கீழக்கரையில் தெரு நாய்கள் பெருமளவு பெருகி பொதுமக்கள் அச்சத்துடன் நடக்கும் சூழல் ஏற்பட்டது. இதனால் அச்சம் கொண்டு பொதுமக்கள் பலரும், சமூக ஆர்வலர்கள், கட்சிகள் பலரும் நாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை வைத்தன.
கோரிக்கையை ஏற்று, நகராட்சி நிர்வாகம் இன்று (30/11/2018) இரவு முதல் இவைகளை கட்டுக்கொள் கொண்டு வரும் வரை நகரில் சுற்றித் திரியும் நாய்களை பிடிக்கும் பணி, கீழக்கரை புதிய பேரூந்து நிலையத்தில் இருந்து தொடங்கி உள்ளது.

தங்களது பகுதியில் ஏதேனும் நாய்கள் தொந்தரவு எனில் நகராட்சி அலுவலகத்தில் தொடர்பு கொள்ளலாம்.
போன் : 04567 241317
செல் : 98409 09198

தகவல் :-  மக்கள் டீம்.

———————————————————————Hala’s – நோன்பு பெருநாள சமையல் போட்டி..

Last date 15th May 2021

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image