அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு எதிராக செயல்படும் ஆப்பரேட்டர்கள் மீது நடவடிக்கை.. அமைச்சர் மணிகண்டன் எச்சரிக்கை..

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் சார்பில் கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்கு உயர்தர செட்டாப் பாக்ஸ் வழங்கும் விழா இராமநாதபுரத்தில் இன்று  (07.11.2018) நடந்தது.  இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி வரவேற்றார்.

அரசு கேபிள் டிவி ஆப்பரேட்டர்களுக்கு உயர்தர (ஹெச்டி) செட்டாப் பாக்ஸ்கள், 224 பயனாளிகளுக்கு ரூ.1, 67, 47,856 மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை தமிழக தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் மணிகண்டன் வழங்கினார். அவர் பேசியதாவது, @தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் 70.52 லட்சம் இணைப்புகள் உள்ளன. 26, 823 ஆப்பரேட்டர்கள் பணியாற்றுகின்றனர். இதில் 16, 549 கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் மூலம் 30 லட்சம் பேருக்கு ஸ்டாண்டர்டு செட்டாப் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. 12 ஆயிரம் இணைகளுக்கு உயர்தர (எச்டி ) செட்டாப் பாக்ஸ் வழங்கப்பட உள்ளது. எச்டி செட்டாப் பாக்ஸ் விரும்பும் சந்தாதாரர்கள் ரூ.500 கட்டணம் செலுத்தி கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் மூலம் பெற்றுக் கொள்ளலாம். அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு எதிராக செயல்படும் கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். கமிஷன் தொகைக்கு ஆசைப்பட்டு தனியார் கேபிள் நிறுவனத்திற்கு உடந்தையாக செயல்பட்டு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் கேபிள் டிவி ஆப்பரேட்டர் உரிமம் ரத்து செய்யப்படும். போலியான வாக்குறுதிகளை நம்பி தனியார் நிறுவன செட்டாப் பாக்ஸ்களை பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தனியார் நிறுவன கேபிள் டிவி இணைப்பு ஏற்படுத்தி கொண்டால், அரசு கேபிள் டிவி நிறுவன இலவச வசதிகளை பெற முடியாது “ என்றார்.

அதைத் தொடர்ந்து  வருவாய் கோட்டாட்சியர் சுமன் நன்றி கூறினார். செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை,  அரசு கேபிள் டிவி நிறுவன தாசில்தார் செய்யது முகமது, வேளாண் துறை அலுவலர் ஷேக் அப்துல்லா , மாவட்ட கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் ஜெய் பாரத். (இராமநாதபுரம்), மாலிக்(பரமக்குடி), சிவராமகிருஷ்ணன் (தொண்டி), நாகராஜன் (இராமேஸ்வரம் ), செல்வம் (கமுதி) உள்பட பலர் பங்கேற்றனர்.

To Download Keelainews Android Application – Click on the Image

சத்தியபாதை மாத இதழ்..

சத்தியபாதை மாத இதழ்..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..