கீழக்கரையில் கேம்பஸ் ஃப்ரெண்ட் தினம்….

கேம்பஸ் ஃப்ரண்ட் உருவான தினமான இன்று கேம்பஸ் ஃப்ரெண்ட் தினம் தேசிய அளவில் நாடு முழுவதும் இன்று (07/11/2018) கொண்டாடப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக காலை 8:45 மணி அளவில் கீழக்கரை முஸ்லிம் பஜாரில் கேம்பஸ் ஃப்ரண்டின் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நகர் தலைவர் காதர் முகைதீன் கொடி ஏற்றி வைத்து, கேம்பஸ் ஃப்ரண்டின் மாணவர் எழுச்சிக்கான முழக்கங்களை முழங்கச் செய்தார்.

அதைத் தொடர்ந்து கேம்பஸ் ஃப்ரண்டின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முகமது சுகைல்  மாணவர்களின் எழுச்சிக்கான உறுதிமொழியை மக்களை எடுக்கச் செய்தார்.