இராமநாதபுரத்தில் மாற்றுதிறனாளிகளுக்கான குறை தீர்க்கும் கூட்டம்..

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் 16.11.2018 (வெள்ளிக்கிழமை)காலை 9.30 மணி முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான குறை தீர்க்கும் (அரசு திட்டங்கள் பெற) சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இம்முகாமில் இராமநாதபுரம் மாவட்டத்தில் வசிக்கும் அனைத்து மாற்றுத் திறனாளிகளும் பங்கேற்று கீழ்கண்டவற்றில் தங்களின் கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக வழங்கி பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த முகாமில் மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை (PHP), மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான பராமரிப்பு உதவித்தொகை (MG), வங்கிக்கடன் குறைகள், இலவச தொழில் பயிற்சி ( Skill Developement Training), இலவச வீட்டு மனை பட்டா, இலவச தொகுப்பு வீடு மற்றும் பசுமை வீடு, பாரத பிரதமர் இலவச வீடு வழங்கும் திட்டம் மற்றும் உதவி உபகரணங்களாகிய இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் வாகனம், மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம், காதொலி கருவி, சக்கர நாற்காலி, மூன்று சக்கர வண்டி, ஒளி உருப்பெருக்கி, ஒளிரும் மடக்கு குச்சி, கருப்பு கண்ணாடி, பிரெய்லி கைகடிகாரம், ஊன்றுகோல், நவீன செயற்கை கால், கால் தாங்கிகள், நடைப்பயிற்சி உபகரணம், மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்பு சக்கர நாற்காலி மற்றும் முதுகு தண்டுவடம் பாதித்தோருக்கான சிறப்பு சக்கர நாற்காலிகள் போன்றவற்றிக்கு மனு வழங்கலாம்.

இந்த சிறப்பு குறை தீர்க்கும் முகாமிற்கு வரும்போது தங்களின் கோரிக்கை மனுவுடன், அடையாள அட்டை நகல், ரேஷன் காா்டு நகல், ஆதாா் அட்டை நகல், மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 4 ஆகியவற்றை இணைத்து கொண்டுவரவும். மாவட்ட ஆட்சியருக்காக, (மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா், இராமநாதபுரம்).

கீழக்கரையை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் இந்த முகாமில் கலந்து கொள்ள வழிகாட்டுதல் மற்றும் இலவச வாகன வசதிகளை மக்கள் நல பாதுகாப்புக்கழகம்,சட்ட விழிப்புணர்வு இயக்கம்,கீழை நியூஸ் மற்றும் சத்திய பாதை அறக்கட்டளை செய்ய இருக்கின்றார்கள்.உதவி தேவைப்படுவோர் கீழ்கண்ட அலைபேசியில் தொடர்பு கொள்ள கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

9443358305 9677640305 9791742074

இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் இந்த முகாமில் கலந்து பயன் அடைய இந்த தகவலை அவர்களின் கவனத்திற்கு அல்லது அவர்களின் குடும்பத்தினர் கவனத்திற்கு கொண்டு சொல்லுங்கள்.

#Paid Promotion