Home செய்திகள் பெட்ரோலுக்கு நிறுவனங்கள் விலை நிர்ணயம் செய்யும் நாட்டில்.. விவசாயிகள் விளைவித்த பொருளை இலவசமாக கொடுக்கும் அவல நிலை.. விவசாயி வருத்தக் குரல்..வீடியோ..

பெட்ரோலுக்கு நிறுவனங்கள் விலை நிர்ணயம் செய்யும் நாட்டில்.. விவசாயிகள் விளைவித்த பொருளை இலவசமாக கொடுக்கும் அவல நிலை.. விவசாயி வருத்தக் குரல்..வீடியோ..

by ஆசிரியர்

டிஜிட்டல் இந்தியாவில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி ஆகும் பெட்ரோல் பொருட்களுக்கு நிறுவனம் நினைக்கும் விலைக்கு விலையை நிர்ணயம் செய்யலாம், ஆனால் உடலை வறுத்து வெயிலிலும், மழையிலும் நேரம் காலம் பார்க்காமல் விவசாயம்செய்யும் விவசாயி, தன் பொருட்களுக்கு நியாயமான விலை நிர்ணயிக்க முடியாமல் ஏல ஏஜென்சிகளிடம் பொருட்களை இழக்கும் பரிதாப சூழலிலேயே உள்ளார்கள்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா கீரமங்கலத்தில் நார்த்தங்காய், எலுமிச்சை போன்ற விவசாயத்தை நம்பியே இங்குள்ள மக்கள் உள்ளார்கள்.  ஆனால் தன் விளைச்சலை ஏல மண்டிகளில் விற்பனைக்கு கொடுக்கும் பொழுது பல சமயங்களில் விற்ற காசுக்கு செலவு கணக்குதான் வருகிறதே தவிர பணம் கிடைப்பதில்லை. சமீபத்தில் 40கிலோ நார்த்ங்காயை ஏல மண்டியில் கொடுத்த விவசாயிக்கு வரவு 120/- அதற்கான செலவு 120/- என கணக்கு வந்துள்ளது.

நிலைமை இப்படி என்பதால் விவசாயத்திற்காக செய்த செலவு கூட எடுக்க முடியாமல் கடன் சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள்.  விவசாயம் நாட்டின் முதுகெலும்பு என பறைசாற்றும் அரசாங்கம் விவசாயிகள் நலனை பேணவில்லை என்றால் விவசாயிகள் தற்கொலைகள் ஒரு தொடர்கதைதான்.

செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!