மதுரை பள்ளி மாணவர்கள் மாயம்… கடத்தலா??

திருப்பரங்குன்றம் அருகே உள்ள பசுமலை தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் பழங்காநத்தம் பசுமலை பைக்கரா ஹார்விபட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஐந்து மாணவர்கள் நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு வந்து விட்டு மாலை பள்ளியில் இருந்து சென்றவர் வீடு திரும்பவில்லை.

அதனால் பெற்றோர்கள் இன்று காலை பள்ளியை முற்றுகையிட்டனர் இதனைத்தொடர்ந்து திருப்பரங்குன்றம் காவல்துறை ஆய்வாளர் நாகராஜ் மற்றும் உதவி ஆய்வாளர் துறை பாண்டி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி மாணவர்களை தேடி வருகின்றனர் தற்போது இந்த மாணவர்கள் சென்னையில் இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .