இராமநாதபுரம் மாவட்டம் யூத் ரெட் கிராஸ்  கல்லூரி மாணவர்களுக்கான கற்றல் மற்றும் பயிற்சி முகாம்..

இராமநாதபுரம் மாவட்ட யூத் ரெட் கிராஸ் மாணவ மாணவியருக்கான ஒருநாள் கற்றல் மற்றும் பயிற்சி முகாம் சி.எஸ்.ஐ. கல்வியியல் கல்லூரியில் 03.10.2018 அன்று ரெட் கிராஸ் துணைத் தலைவர் ஹாஜி அஸ்மாபாக் அன்வர்தீன் தலைமையில் ரெட் கிராஸ் சேர்மன் எஸ். ஹாரூன், கல்லூரி முதல்வர் முனைவர் திருமதி டோலோரோஸ் மேரி மற்றும் செய்யது அம்மாள் கல்லூரி முதல்வர் முனைவர் எஸ். வி.எஸ். அமானுல்லா ஹமீது ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது  16 கல்லூரிகளில் இருந்து 70 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். யூத் ரெட்கிராஸ் மாவட்ட அமைப்பாளர் பேராசிரியர் ஆ.வள்ளிவிநாயகம் வரவேற்றார்.   சிறப்பு வருந்தினராகக் கலந்து கொண்ட காரைக்குடி அழகப்பா பலகலை கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஜி. வினாயகமூர்த்தி கல்லூரிகளில் மாணவர்கள் செய்யவேண்டிய மனித நேயப் பணிகள் குறித்து சிறப்புரையாற்றினார்.

ரெட் கிராஸ் புரவலர் கவிஞர் எம். தேவி உலகராஜ் மனித வள மேம்பாட்டுக்கான பயிற்சிகளையும் மனித நேயத்தோடு செய்யும் செயலகளுக்கு கிடைக்கும் பெருமையையும் பற்றி விவரித்தார். ரெட் கிராஸ் அமைப்பின் இறைவணக்கப் பாடல்,  வரலாறு, அதன் 7 அடிப்படை கொள்கைகள் கட்டமைப்பு முறை,  ரெட் கிராஸ் அமைப்பின் செயல்பாடுகள் மற்றும் பெருங்குளம் ரெட் கிராஸ் மருத்துவமனை ஆகியவை பற்றி மாவட்ட செயலாளர் எம். ராக்லாண்ட் மதுரம் பவர்பாயிண்ட் மூலம் விவரித்தார்.

ரெட் கிராஸ் மூலம் செயல்படுத்தப்படும் “அமரர் ஊர்தி சேவை வாகனம்” மற்றும் “இலவச தாய் சேய் நல ஊர்தி” ஆகியவை  மற்றும் அனைத்து வசதிகளுடன் கூடிய ரெட் கிராஸ் மொபைல் ICU வாகனம் ஆகிய வாகனங்கள் மானவர்களின் நேர்முகப் பார்வைக்கு கொடுக்கப்பட்டது.  முதலுதவி பயிற்றுனர் எஸ். அலெக்ஸ்  முதலுதவி என்றால் என்ன அதனை எப்பொழுது எவ்வாறு செய்யவேண்டும் என்பது பற்றியும் அவசர நிலையில் மேற்கொள்ள வேண்டிய CPR எனப்படும் மூச்சு பயிற்சி பற்றியும்  செயல் முறை விளக்கம் அளித்தார்.

மாவட்ட பேரிடர் மேலாண்மை பயிற்றுனர் எஸ். பெனடிக்ட் பேரிடர், அதன் வகைகள் அதனை மேற்கொள்ளும் விதம் ஆகியவை பற்றி பவர்பாயிண்ட் மூலமும் மற்றும் விபத்தில் காயமடைந்தவரை  கிடைக்கும் பொருட்களைக் கொண்டு மீட்பது பற்றியும் செயல் முறை விளக்கம் அளித்தார்.

யூத் ரெட்கிராஸ் மாவட்ட இணைஅமைப்பாளர் பேராசிரியர் ஆ. ஆனந்த் நன்றியுரையாற்றினார். ரெட் கிராஸ் ஆயுட்கால உறுப்பினர் ஏ. மலைக்கண்ணன் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் செய்திருந்தனர்.