சாலை தெரு 18 சுஹாதக்கள் பெண்கள் மதரஸாவின் முதலாம் ஆண்டு விழாவும் மற்றும் பட்டமளிப்பு விழா..

சாலை தெருவில் இயங்கிக்கொண்டு இருக்கும் 18 சுஹாதக்கள் பெண்கள் மதரஸாவின் முதலாம் ஆண்டு விழாவும், மற்றும் பட்டமளிப்பு விழா இன்று 20/08/2018 சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவுக்கு அல்ஹாஜ். களஞ்சியம் செய்யது மொஹிதீன் ஹாஜியார் தலைமையில் நடைபெற்றது, சிறப்பு விருந்தினராக அல்ஹாஜ். மஹ்ரூப், முஹம்மத் இபுராஹிம் பாகவி , அல்ஹாஜ் செய்யது ஜாபர் பாதுஷா, மௌலானா ஆரிப் ஆலிம்ஷா, மௌலானா மன்சூர் ஆலிம்ஷா  மற்றும் மதரசாவின் நிர்வாகிகள் அல்ஹாஜ். க. கு. ஜப்பார், அல்ஹாஜ். மீரா சாஹிப், அல்ஹாஜ். சாகுல் ஹமீத் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.

இவ்விழாவின் முடிவில் ஊரின் நலன் வேண்டி பிராத்தனையும், மழை வேண்டி துஆவும் கேட்கப்பட்டது. இவ்விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் அல்ஹாஜ். குதுபுதீன் ராஜா  நன்றி கூறினார்.