62வது போலீஸ் பணி திறன் போட்டி ஜூலை 22 முதல் 27 வரை சென்னையில் நடந்தது..இராமநாதபுர வட்ட மோப்ப நாய்கள் பதக்கம் வென்றது..

தமிழ்நாடு போலீஸ் அகாடமி சார்பில் 2018ம் ஆண்டுக்கான 62வது போலீஸ் பணி திறன் போட்டி ஜூலை 22 முதல் 27 வரை சென்னையில் நடந்தது. இதில் இராமநாதபுரம் மாவட்ட போலீஸ் மோப்ப நாய் அணி பங்கேற்றது. குற்ற மோப்ப நாய் ரோமியோ, குற்ற தடுப்பு பயிற்சி திறன் படைத்த நாய் லைக்கா (சிவகங்கை மாவட்டம் ) தலா ஒரு தங்கம் மற்றும் வெண்கல பதக்கம் வென்றன.

மேலும் பதக்கம் வென்று சாதனை படைக்க மோப்ப நாய்கள் ரோமியோ, லைக்காவுக்கு சிறப்பு பயிற்சி அளித்த தலைமை காவலர்கள் தில்லை முத்து (HC 1909), வீரமணி (HC1305) ஆகியோரை இராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி., என்.காமினி, இராமநாதபுரம் எஸ் பி., ஓம் பிரகாஷ் மீனா ஆகியோர் பாராட்டினர்.