ஜித்தாவில் “FRIENDS REPUBLIC CLUB” நடத்திய மாபெரும் வாலிபால் போட்டி..

தமிழகம், கேரளா  மக்கள் மற்றும் அதிகமான கீழக்கரை இளைஞர்கள் இணைந்து கடந்து வருடம் ஆரம்பிக்கப்பட்ட கிளப் “FRIENDS REPUBLIC CLUB”. இந்த கிளப் சார்பாக கடந்த வெள்ளிக்கிழமை (23-02-2018) அன்று பல நாட்டு வீரர்கள் கலந்து கொண்ட மாபெரும் வாலிபால் போட்டி பின்மாலிக் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் லெபனான், சிரியா, பாகிஸ்தான் மற்றும் இந்தியா கிளப்கள் சார்பாக பல அணிகள் மோதினர். இறுதியாக முதல் பரிசு சவுதி ரியால்.5000/- மற்றும் கோப்பையை அஜீசியா கிளப் வென்றது. இரண்டாவது பரிசாக சவுதி ரியால் 3000/- மற்றும் கோப்பையை FRIENDS REPUBLIC CLUB(FRC) வென்றது.

இந்தொடரின் சிறந்த விளையாட்டு வீரர்களாக பாகிஸ்தானை சார்ந்த முகம்மது மற்றும் சிரியா நாட்டை சார்ந்த மாங்கோ ஆகியோரும், ஒட்டு மொத்த தொடர் நாயகனாக சவுதி வீரர் அஹமது தேர்ந்தெடுக்கப்பட்டார்.

புகைப்படத் தொகுப்பு