கீழக்கரையில் புதிய உதயம் – அல்மாஸ் ஆப்பக்கடை – ஒரு நேரடி ரிப்போர்ட்…

கீழக்கரையில் கடற்கரை ஓரத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது “அல்-மாஸ் ஆப்பக்கடை”. இங்கு வகை வகையான ஆப்பம் முதல் அனைத்து வகையான சிக்கன், மட்டன், ஆட்டுக்கால்சூப் போன்ற உணவு வகைகளும் கிடைக்கின்றது.

இக்கடையின் உரிமையாளர் கூறுகையில் நாங்கள் இங்கு வியாபாரம் தொடங்கும் பொழுது தூரமாக உள்ளதே என்று எண்ணினோம், ஆனால் எங்களுடைய சுவையின் மீது நம்பிக்கை வைத்தே தொடங்கினோம் என்றார்.

அல் மாஸ் ஆப்பக்கடை உரிமையாளர் கூறியது போலவே மக்கள் அங்கு கிடைக்கும் சுவையான உணவுக்கு தேடி வருவதை நாம் காண முடிந்தது. இப்புதிய தொழில் வளர கீழை நியூஸ் நிர்வாகம் வாழ்த்துகிறது.