“அடுத்தது என்ன?? – What Next?” – தாசிம் பீவி கல்லூரியில் மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி – வீடியோ தொகுப்பாக…

கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் இன்று (06-01-018) காலை 10.00 மணி முதல் கல்லூரி வளாகத்தில் “WHAT NEXT – Plan Your Next Move – Knowledge will bring up the opportunity to make a difference” – வாருங்கள் வழிகாட்டுகிறோம்”  என்ற தலைப்பு வாசகத்துடன் மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி கல்லூரி மாணவி அஃப்ரினா செரின் இறையுரையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து கல்லூரி துணை பேராசிரியர் ராதிகா வரவேற்புரை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியின் தலைமையுரையை கல்லூரி முதல்வர் சுமையா வழங்கினார்.

இந்நிகழ்ச்சியின் முன்னிலை வழிகாட்டும் கருத்துரையை ACCESS INDIA N.சுல்தான் மற்றும் மற்றும் சென்னை ஆலிம் முகம்மது பொறியியல் கல்லூரி கணிணி துறை துணை பேராசிரியர் Y.முகம்மது ரஃபிக் ஆகியோர் வழங்கினர். அதைத் தொடர்ந்நு நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட “விஜய் டி.வி” புகழ் ஈரோடு மகேஷ், அவருடைய நகைச்சுவையுணர்வுடன் கூடிய பேச்சுடன் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் உரையை வழங்கினர். ஈரோடு மகேஷ் தன்னுடைய உரையில் மாணவர்களுக்கு நல்ல நட்பு அவசியம், வாழ்கையில் அனைத்து நிலைகளிலும் கை கொடுப்பவர்கள் நண்பர்கள், அதே போல் பெற்றோர்களை வாழ்கையில் ஊதாசினப்டுத்துபவர்கள் வாழ்கையில் முன்னேறியது இல்லை என்பதையும் வலியுறுத்தினார். பின்னர் நிகழ்ச்சியின் சிறப்பு உரையாக அழகப்பா பல்கலைக்கழகம் குருமூர்த்தி மாணவர்கள் மத்தியில் வழங்கினார்.

இறுதியாக நிகழ்ச்சி கல்லூரி வணிக மேலாண்மை துறை துணைப் பேராசிரியர் ஜெயந்தி நன்றியுரையுடன் நிறைவுற்றது.