தேசிய அளவிலான கல்வி மாநாட்டில் விருது பெற்ற தாசிம் பீவி அப்துல் காதர் கல்லூரி முதல்வர்..

மும்பையில் டிசம்பர் 23 மற்றும் 24ம் தேதி AMP ( Association of Muslim Professionals) சார்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கத்திற்கு இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து சமுதாயத்திற்க்காக கல்வி மற்றும் வேலை வாய்ப்பிற்க்காக சேவை புரிபவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் இந்தியாவில் கல்விக்காக சிறந்த சேவை புரிந்தவர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டது. இதில் கீழக்கரை தாசிம் பீவி கல்லூரி முதல்வர் சுமையாவுக்கு கல்வி துறையில் சிறந்த சேவை புரிந்தமைக்காக விருது வழங்கப்பட்டது.

சிறந்த விருது பெற்ற தாசிம் பீவி கல்லூரி முதல்வர் சுமையாவை இத்தருணத்தில் வாழ்த்துவதில் கீழைநியூஸ் மகிழ்ச்சியடைகிறது.