மீண்டும் தலைதூக்கும் நாய் தொல்லை.. SDPI கட்சி நகராட்சிக்கு மனு..

கீழக்கரை சுற்று வட்டார பகுதிகளில் மக்களை அச்சுறுத்தும் நாய்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.  அதுவும் முக்கியமாக பேருந்து நிலையம் மற்றும் பல பகுதிகளில் சுற்றி திரியும் சோறி நாய் மற்றும் நாய்களின் அதிகரிப்பால் பஸ் நிலையம் செல்லும் பொது மக்கள் மற்றும் பள்ளி கல்லுரி மாணவ மாணவிகள் மிகுந்த அச்சத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் நகராட்சி ஆணையரிடம் sdpi கட்சி மற்றும் பல சமூக அமைப்புக்கள் மனு கொடுத்தும் எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இப்பிரச்சினையை வலியுறுத்தி மீண்டும் கீழக்கரை நகர் sdpi கட்சி மற்றும் கீழக்கரை மக்கள் பொது தளம் சார்பாக உடனடியாக நாய்களை பிடிப்பதற்கு துரித படுத்த வேண்டும் என்று நகராட்சி ஆணையரிடம் மனு கொடுக்கப்பட்டது. இதற்கு காலம் தாழ்த்தாமல் முறையான நடவடிக்கை எடுக்காவிட்டால், நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியப்படுத்து போக்கை கண்டித்து சுவரொட்டிகள் ஒட்டப்படும் என்று அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.