கீழக்கரை நகராட்சி சார்பாக தொடர்ச்சியாக நகரை தூய்மைபடுத்தும் நிகழ்ச்சி…

கீழக்கரை நகராட்சியும், ஹமீதியா பள்ளி NSS மாணவர்களும் இணைந்து டெங்கு கொசு விழிப்புணர்வு உண்டாக்கும் வகையில் தொடர்ச்சியான துப்புரவு பணிகளில் கடந்த 29ம் தேதி முதல் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிகழ்வின் தொடர்ச்சியாக இன்று (02-10-2017) 3வது வார்டில் உள்ள மீனவர் குப்பம் சுத்தப்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் துணை சேர்மன் மற்றும் நகராட்சி உயர் அதிகாரி டாக்டர்.மாஃபியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கழிவு நீர் நடைபாதையில் நுழைந்து அசுத்தம் ஏற்படாத வகையில் நிலத்தடி கழிவு நீர் தொட்டியும் கட்டப்பட்டது.

உதவிக்கரம் நீட்டுங்கள்..