கீழக்கரை நகராட்சியில் ‘அனைவருக்கும் வீடு’ திட்ட முகாம் 13, 14 மற்றும் 15 தேதிகளில் நடைபெறுகிறது – ஏழை மக்கள் பயன் பெற வேண்டுகோள்

‘அனைவருக்கும் வீடு’ என்கிற பெயரில் மத்திய, மாநில அரசுகளின், 2.10 லட்சம் ரூபாய் மானியத்தில், பட்டா நிலத்தில் வீடு கட்ட விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என குடிசை மாற்று வாரியம் அழைப்பு அறிவித்துள்ளது. தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில், மத்திய அரசின் அனைவருக்கும் வீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பட்டா உள்ள குடிசைப்பகுதி மக்கள், சொந்தமாக வீடு கட்ட, 2.10 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. அதன்படி, சொந்த இடத்தில், குடிசை அல்லது சாதாரண வீட்டில் வசிப்போர், அரசு மானியத்தை பெற்று, 350 சதுரடி பரப்பளவில், கான்கிரீட் வீடு கட்டலாம்.

குடிசை மாற்று வாரியம் சார்பில், பட்டா நிலத்தில் உள்ள குடிசைகளுக்கு பதிலாக, வீடு கட்டும் திட்டத்தில், நம் இராமநாதபுரம் மாவட்டத்திற்கு 2000 க்கும் மேற்பட்ட வீடுகள் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கீழக்கரை நகராட்சி ஆணையாளர் வசந்தி கூறுகையில் ”சொந்த இடத்தில் வீடு கட்ட விரும்பும் ஏழை எளிய மக்கள் கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் எதிர்வரும் செப்டம்பர் 13, 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். முகாமிற்கு வரும் போது வீடு கட்ட இருக்கும் இடத்திற்கான பத்திர நகல், ஆதார் நகல், ரேஷன் கார்டு நகல், பாஸ்போர்ட் அளவு போட்டோ, வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் முதலியவற்றை மறக்காமல் கொண்டு வர வேண்டும்” இவ்வாறு தெரிவித்தார்.

இத்திட்டத்திற்காக மத்திய அரசு, 1.50 லட்சம் ரூபாய்; மாநில அரசு, 60 ஆயிரம் ரூபாய் வழங்கும். முகாமில் தேர்வாகும் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு பயனாளிகளுக்கு, வீடு கட்டும் போது, நான்கு கட்டமாக மானியம் விடுவிக்கப்படுகிறது . அஸ்திவார நிலை, ஜன்னல் மட்டம், கூரை மட்டம் என, தலா, 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. பணிகள் முடிந்த பிறகு, 60 ஆயிரம் ரூபாய் மானியம் தரப்படுகிறது. இந்த முகாமிற்கு வந்தாலே போதும், எந்த அலுவலகத்துக்கும் சென்று அலைய வேண்டியதில்லை. ‘அனைவருக்கும் வீடு’ குறித்த மேலதிக விபரங்களுக்கு கீழ் குறிப்பிட்டிருக்கும் குடிசை மாற்று வாரிய அதிகாரிகளை அணுகலாம்

மகேஷ் : 9487390981      தினேஷ் : 9790955056       ரவி : 9443183194

1 Comment

1 Trackback / Pingback

  1. கீழக்கரையில் அனைவருக்கும் வீடு திட்டம் முகாம் தொடங்கியது.. - KEELAI MEDIA AND ADVERTISEMENT PVT.LTD - www.keelainews.com (உலக செய்திக

Leave a Reply

Your email address will not be published.