கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் பொறியியல் சேர்க்கைக்கு இலவச ஆன் லைன் வசதி..

​கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் அண்ணா பல்கலையின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளில் படிப்பதற்கான ஆன்லைன் விண்ணப்பம் செய்வதற்கு இலவச இணையதள வசதி விண்ணப்பம் பூர்த்தி செய்வதகு உதவி செய்ய ஏற்பாடு துவக்கப்பட்டுள்ளது.

​இந்த இலவச சேவையை கல்லூரி சேர்மன் SM. முஹம்மது யூசுப் துவக்கி வைத்தார். பொறியியல் படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் சேர விரும்பும் மாணவர்கள் http://www.annauniv.edu என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

http://www.annauniv.edu

​இது பற்றி அறக்கட்டளை இயக்குநர். ஹாமீது இபுராஹிம் மற்றும் கல்லூரி முதல்வர். முனைவர். அப்பாஸ் மைதீன் கூறுகையில் மாணவர்கள் பிழையின்றி விண்ணப்பிக்க எங்களது கல்லூரி பேராசிரியர்கள் வழிகாட்ட உள்ளனர். மேலும் மாணவர்கள் வசதிக்காக சிறப்பு கல்லூரி பேருந்துகள் இராமநாதபுரம் புதிய பேருந்து மற்றும் இரயில்வே கேட்டிலிருந்து; மே 5 முதல மே 30 வரை காலை 8.20 மணிக்கு புறப்படும். இதனை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என்றனர்.

​பதிவு செய்ய வரும் மாணவர்கள் பெற்றோரின் வருமான சான்று, ஜாதிச்சான்று மற்றும் முதல் பட்டதாரியாக இருப்பின் அதற்கான சான்று கொண்டு வர வேண்டும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.