கீழை நகருக்கு புதிய அத்தியாயம் கீழை நியூஸ்..

 

கீழக்கரையில் 29-12-2016 அன்று மாலை 8.00 மணி அளவில் கீழை நியூஸ் இணைய தளம் ஆரம்பம், கீழக்கரை மக்கள் களம் அறிமுக நிகழ்ச்சி மற்றும் சட்டப்போராளிகளுக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சி வடக்கு தெரு இஸ்லாமிய அமைதி மையத்தில் குர்ஆன் கிராத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியை சாலிஹ் ஹுசைன் தொகுத்து வழங்கினார்.

மக்கள் களத்தின் பொருளாளர் மற்றும் அல் பையினா மெட்ரிகுலேசன் பள்ளியின் தாளாளர் ஜாஃபிர் சுலைமான் வரவேற்புரையாற்றினார்.

பின்னர் மக்கள் களத்தின் செயலாளர் மற்றும் கீழை நியுஸின் நிர்வாக குழு உறுப்பினர் முஜம்மில் கீழக்கரை மக்கள் களத்தின் அறிமுக உரையாற்றினார்.

மக்கள் களத்தின் தலைவர் மற்றும் கீழை நியுஸின் நிர்வாக குழு உறுப்பினர் அப்துல்லலா செய்யது ஆப்தீன் இணையதளத்தின் அறிமுக உரையாற்றினார்.

மக்கள் களத்தின் அரசியல் ஆலோசகர் ரஃபிக் கீழை நியூஸின் தினசரி காலண்டரை வெளியிட்டு வாழ்த்துரையாற்றினார்.

கீழக்கரையின் வரலாற்று ஆராய்ச்சியாளர் அ.மு சுல்தான் கீழை நியூஸின் இணையதளம் www.keelainews.com ஆரம்பம் செய்து கீழக்கரை உண்மை வரலாற்றை பகிர்ந்து கொண்டார்.

கீழக்கரை மக்கள் களத்தின் துணைத் தலைவர் மற்றும் கீழை நியுஸின் நிர்வாக குழு உறுப்பினர் சாலிஹ் ஹுசைன் சட்டப்போராளிகள் குழுமத்தின் செயல்பாடுகள் அதனால் ஏற்படும் நன்மைகளை விளக்கி கூறினார்.

சட்டப்போராளிகளுக்கான முதல் மூன்று பரிசுகள் மற்றும் மூன்று ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டது. பரிசுகளை நாசா அறக்கட்டளையைச் சார்ந்த அகமது மிர்சா, மக்ரூஃப், ரஃபீக் மற்றும் PVM அறக்கட்டளையைச் சார்ந்த ரஜாக், கீழக்கரை வரலாற்று ஆய்வாளர் அ.மு சுல்தான், கீழக்கரை அமைதி மையத்தின் இமாம் ஆகியோர் பரிசுகளை வழங்கி சிறப்பித்தனர்.


மக்கள் நலப் பாதுகாப்பு கழகத்தின் செயலாளர் முகைதீன் இபுராஹீம் கடந்து வந்த பாதையையும், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் நன்மைகளைப் பற்றியும் விளக்கினார்.

கீழக்கரை மக்கள் களத்தின் பொருளாளர் ஜாஃபிர் சுலைமான் கீழக்கரையில் ஆரம்பம் ஆக இருக்கும் சட்ட ஆலோசனை செயல்பாடுகள் மற்றும் அதனால் உள்ள பலன்களையும் விளக்கினார். வடக்குத் தெரு நாசா அறக்கட்டளை மூலம் 30-12-2016 ஆரம்பிக்க இருக்கும் வட்டியில்லா கடன் திட்டத்தின் விளக்கமும் அறிமுகமும் இந்நிகழ்ச்சியில் எடுத்துரைக்கப்பட்டது. நிகழ்ச்சியின் நன்றியுரையை சாலிஹ் ஹுசைன் வழங்கினார். இறுதியாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சுகாதாரம் பற்றிய பிரசுரமும், கீழை நியுஸீன் தின காலண்டரும் வழங்கப்பட்டது.

To view the video of the full program please click below link..

https://www.facebook.com/syedabdeen/videos/10208203615196403/

1 Comment

1 Trackback / Pingback

  1. உங்கள் ஆதரவுடன் இரண்டாம் ஆண்டில் அடிஎடுத்து வைக்கும் கீழை நியூஸ் … - NEWS WORLD - www.keelainews.com (உலக செய்திகளி

Comments are closed.