கீழக்கரை நகராட்சியில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது…

நேற்று உலகம் முழுவதும் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது. 1972 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையினால் உலகசுற்றுச்சூழல் தினம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.‘தீவு நாடுகளும்இ காலநிலை மாற்றமும்’ என்ற தொனிப்பொருளில் இம்முறை உலக சுற்றுச் சூழல் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. இத் தினத்தின் கொண்டாட்டங்களுக்குப் பொறுப்பாக ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் செயற்படுகின்றது.  இயற்கை வளங்களான நீர்நிலைகள்,  காடுகள்,  வனாந்திரங்கள், வனசீவராசிகள், வளிமண்டலம்,  பறவைகள்,  சோலைகள்,  கடற்கரைகள் அனைத்தும் மனித குலத்துக்காக வடிவமைக்கப்பட்ட பொக்கிசங்களாகும். மனிதகுலம், விலங்கினம்,  பறவையினம், தாவரங்கள்இ கடல்வாழ் உயிரினங்கள் போன்றவற்றின் நல்வாழ்வு இந்த சுற்றுச் சூழலின் சமநிலையிலேயே தங்கியுள்ளது.

இச்சமநிலையில் ஏற்படும் மாற்றங்கள் சுற்றுச் சூழலை மட்டுமன்றிஇ உயிரினங்களின் வாழ்வுக்கும் அச்சுறுத்தலாகவும் ஆபத்தாகவும் அமைந்து விடுகின்றது. நவீன விஞ்ஞான, தொழில்நுட்ப கைத்தொழில்துறை வளர்ச்சியின் காரணமாக சுற்றுச் சூழல் மாசடைகிறது. இரசாயனக் கழிவுகள்,  புகை என்பன நீர் நிலைகள்,  வளிமண்டலம் என்பவற்றை மாசுபடுத்துவதால் உயிரினங்களுக்கு ஆபத்தாக அமைகிறது.

நேற்று கீழக்கரை நகராட்சி சார்பிலும் சுற்றுச்சூழல் தினம் கொண்டபாடப்பட்டது.  இந்நிகழ்ச்சி கீழக்கரை ஆணையர் வசந்தி தலைமையில் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக பச்சை மற்றும் நீலம் நிறம் கொண்ட கழிவு தொட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டு அத்தொட்டிகளில் எவ்வாறான குப்பைகள் கொட்டப்பட வேண்டும் என்று செய்முறை விளக்கங்கள் வணிகர்கள் மற்றும் வணிக வளாகங்களில் செய்து காட்டப்பட்டது. மேலும் சுற்றுச்சூழல் காப்பது பற்றி உறுதிமொழியும் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மீன் மார்கெட், கிழக்குத் தெரு,  வள்ளல் சீதக்காதி சாலை மற்றும் பல பகுதிகளில் நகராட்சி ஊழியர்களால் நடத்திக் காட்டப்பட்டது.  இந்நிகழ்ச்சிகீழக்கரை சுகாதார ஆய்வாளர் திண்ணாயிரமுர்த்தி மேற்பார்வையில் நடைபெற்றது.