Home செய்திகள்கீழக்கரை செய்திகள் மூத்த குடிமக்கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு நலச்சட்டம் செயல்பாடுகள் பயிலரங்கம்..

மூத்த குடிமக்கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு நலச்சட்டம் செயல்பாடுகள் பயிலரங்கம்..

by ஆசிரியர்

இராமநாதபுரம், ஜன.9- இராமநாதபுரத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களுக்கான பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு நலச்சட்டம் 2007 (ம) விதிகள் 2009 குறித்த செயல்பாடுகள் தொடர்பான ஒரு நாள் பயிலரங்கம் நிகழ்ச்சி இன்று (09.01.2024) நடைபெற்றது. பரமக்குடி சார் ஆட்சியர் அபிலாஷா கெளர் துவக்கி வைத்தார். அவர் பேசுகையில், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களுக்கான பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு நல சட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதன் நோக்கம் மூத்த குடிமக்களை நன்றாக பாதுகாத்திட வேண்டும் என்பதே ஆகும். அந்த வகையில் மத்திய மற்றும் மாநில அரசின் வழிகாட்டுதலின்படி மூத்த குடிமக்களை பராமரிப்பதற்கு தேவையான சட்ட வழிகாட்டுதலை வழங்கி அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அரசின் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தமிழக அரசால் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களுக்கான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் காப்பகங்களில் உரிய பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருவது தொடர்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் இவர்கள் யார் என்றால் இன்றைய இளம் தலைமுறையினர் தான் நாளைய மூத்த குடிமக்களாக மாறும் நிலையில் உள்ளவர்கள். நேற்றைய இளம் தலைமுறையினர் தற்பொழுது மூத்த குடிமக்கள் இப்படிப்பட்ட நிலையில் மூத்த குடிமக்கள் அவர்கள் வயதானவர்கள் அவர்களால் ஒன்றும் செய்ய இயலாது. அவர்களால் எந்த பயனும் இல்லை. என்பதைப் போல் அவர்களை புறம் தள்ளும் நிலை ஏற்பட்டால் அவர்களின் மனநிலை என்னவாக மாறும் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலை ஏற்படும். அது போன்ற நிலை ஒருவருக்கு கூட வரக்கூடாது என்பதற்காகத்தான் அரசு போதிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.

இன்றைய தலைமுறையினர் நம்மை உலகிற்கு அடையாளம் காட்டிய அந்த பெற்றோர்களை நன்மதிப்புடன் பாதுகாக்க வேண்டும். அந்த அளவிற்கு நாம் பெற்றோர்களை நேசிக்கின்றோமோ அந்த அளவிற்கு நம் பிள்ளைகள் நம்மை நேசிப்பார்கள் என்பதை மனதில் கொண்டு இன்றைய மூத்த குடிமக்களை அன்புடன் நேசித்து பாதுகாக்க வேண்டுமென பரமக்குடி சார் ஆட்சியர் அபிலாஷா கெளர தெரிவித்தார். பொதுசுகாதாரத்துறை, வருவாய்த்துறை மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர், தாசிம் பீவி மகளிர் கலை கல்லூரி பேராசிரியர் ஆகியோர் கருத்துரை வழங்கினார்.

மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை நல அலுவலர் தேன்மொழி, பொதுசுகாதாரத்துறை துணை இயக்குனர் மரு.கலைச்செல்வி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் பாலமுருகன், தொழில்நுட்ப நேர்முக உதவியாளர் அருணாச்சலம், பேராசிரியர் ஷைனி ஜோ, மாவட்ட சமூக நல அலுவலக கண்காணிப்பாளர் முத்துலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!