அகில இந்திய வேலை நிறுத்தத்தை ஆதரித்து பாப்பாரப்பட்டியில் தொழிற்சங்க கூட்டமைப்பினர் சாலை மறியல் 47 பெண்கள் உள்பட 96 பேர் கைது..

தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் அகில இந்திய வேலை நிறுத்தத்தை ஆதரித்து பாப்பாரப்பட்டியில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 47 பெண்கள் உள்பட 96 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிஐடியு தொழிற்சங்க மாவட்ட தலைவர் நாகராஜன் போராட்டத்துக்கு தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் விஸ்வநாதன், வட்டார செயலாளர் சின்னசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் அர்ச்சுணன், வட்டார செயலாளர் ராஜமாணிக்கம், பொருளாளர் காமராஜ் தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்டார செயலாளர் சக்திவேல், வட்டார தலைவர் சின்னசாமி, இந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட பொருளாளர் ராஜாமணி, சிஐடியுஅரசு போக்குவரத்து கழக மாவட்ட துணை செயலாளர் மணோன்மணி, டாஸ்மாக் பணியாளர் சங்க மாவட்ட நிர்வாகிகள் ரங்கநாதன், மகேந்திரன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க வட்ட நிர்வாகிகள் லோகு,சிலம்பரசன், ஆட்டோதொழிலாளர் சங்க மாவட்ட நிர்வாகி ராஜேந்திரன், சிஐடியு நிர்வாகிகள் சண்முகம், தர்மராஜன் உள்ளிட்ட பலர் மறியல் போராட்டத்தில் கலந்துகொண்டு கைதாகினர்.

செய்தி:- சிங்காரவேலு, தர்மபுரி