Home செய்திகள் அகில இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் மற்றும் WJUT நிர்வாகிகள் சந்திப்பு.!

அகில இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் மற்றும் WJUT நிர்வாகிகள் சந்திப்பு.!

by mohan

தமிழகத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை புரிந்த மாண்புமிகு நீதிபதி மற்றும் அகில இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர்  சி.கே. பிரசாத்  “தமிழ் நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின்” மாநிலத் தலைவரை தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்தார், அதனை அடுத்து  சங்கத்தின் தலைவர் தலைமையில் பல்வேறு நிர்வாகிகள் சென்று சந்தித்து பேசினர்.அப்போது பல விஷயங்கள் பேசப்பட்டது மட்டும் அல்லாமல்  சங்கத்தின் சார்பாக பல கோரிக்கைகளும் முன் வைக்கப்பட்டது.

அதில் முக்கியமாக சில மாநிலங்களில் இருப்பது போல் தமிழகத்திலும் பத்திரிகையாளர் பாதுகாப்பு சட்டம் அமைக்க பட வேண்டும் என்ற கோரிக்கை. அனைத்தையும் பொறுமையாக கேட்டுக்கொண்டு நிச்சயமாக அதற்கான முயற்சிகள் செய்வோம் என்று கூறினார். மேலும் மாண்புமிகு சி.கே.பிரசாத் கூறும்போது தமிழகத்தில் இருந்து தமக்கு இரண்டே இரண்டு புகார்கள் மட்டுமே வந்ததாகவும் (அன்பழகன் மற்றும் கார்ட்டூனிஸ்ட் பாலா சம்பந்தமாக) மேலும் பத்திரிகையாளர்கள் பாதிக்கப்பட்டது சம்பந்தமாக தன்னிடம் புகார் அளிக்கப்படும் பட்சத்தில் தகுந்த முறையில் நடவடிக்கை என்றும் கூறினார். WJUT எப்போது சங்க நிகழ்ச்சி நடத்தினாலும் தாம் அவசியம் வந்து கலந்து கொள்வதாகவும் கூறியுள்ளார். இந்த சந்திப்பின் போது மாநிலத் தலைவர் அ.ஜெ.சகாயராஜ், மாநிலப் பொதுச் செயலாளர் ஆர். சந்திரிகா, மாநில இணைச் செயலாளர்கள் லட்சுமி ராஜாராம், சன் டிவி ரமேஷ், ஜெய் சங்கர், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ரவிச்சந்திரன், காந்தி, பொதுக் குழு உறுப்பினர் மலையப்பன், தலைமை நிலைய இணைச் செயலாளர் வல்லரசு,சென்னை மாவட்ட செயலாளர் இஸ்மாயில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுலைமான், மாவட்ட துணைத் தலைவர்கள் ஆண்டனி செல்வா, ராஜ் டிவி சாலமன் மாவட்ட இணைச் செயலாளர் பபிதா மற்றும் பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!