முகம்மது சதக் தஸ்தஹீர் கல்வியியல் கல்லூரியில் வில் உலக சாதனை ஆய்வு மையத்தின் உயர்வோம் உயரச்செய்வோம் கலை நிகழ்ச்சி..

11.2.2019 அன்று இராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பின்புறம் அமைந்துள்ள முகம்மது சதக் தஸ்தஹீர் கல்வியியல் கல்லூரியில் வில் உலக சாதனை ஆய்வு மையத்தின் உயர்வோம் உயரச்செய்வோம் கலை நிகழ்வானது இனிதே நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் திரு சோமசுந்தரம் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக கீழக்கரை க்ளாசிஃபைட் நிறுவனர் & நிர்வாக அறங்காவலரான எஸ்.கே.வி.ஷேக் ஜெய்னுலாபுதீன் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் சூரா மற்றும் திருக்குறள் ஒப்புவித்தல், ஓவியம் வரைதல், பாடல் பாடுதல், விரைவாக வாசித்தல்,கவிதை,நாணய சேகரிப்பை காட்சிப்படுத்துதல் உள்ளிட்ட பல திறமைகளைப்பலர் வெளிப்படுத்தினர். இந்த நிகழ்வின் துவக்கத்தில் வில் உலக சாதனை பட்டம் பெற்ற மாணவி அப்ஃரின் வஜிஹா அனைவரையும் வரவேற்றார்.

இந்த நிகழ்வில் பெண்ணிய நிலவே அமைப்பின் இலட்சினை வெளியீடு சிறப்பான முறையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பெண்ணிய நிலவே அமைப்பின் தலைவர் டாக்டர்.மோகனப்பிரியா அவர்கள் அமைப்பு பற்றிய விளக்கத்தை மாணவியர் மத்தியில் எடுத்துக்கூறினார். வில் உலக சாதனை ஆய்வு மையத்தின் நிறுவனரும் தலைவருமான கலைவாணி மற்றும் முதன்மைச்செயலர் தஹ்மிதா பானு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு பணிகளை கல்வியல் கல்லூரியின் முதல்வர் மற்றும் மாணவியர் சிறப்பாக செய்திருந்தனர்.இந்த நிகழ்வின் இறுதியில் தன்னுடைய திறமைகளை வெளிப்படுத்திய அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது. உயர்வோம் உயரச்செய்வோம் எனும் அமைப்பானது மனிதர்களிடம் புதைந்து கிடக்கும் திறமைகளை தாழ்வு மனப்பான்மையிலிருந்து வெளிவந்து வெளிப்படுத்த ஒரு பொதுவான மேடையை ஏற்படுத்திக்கொடுக்கிறது. இது போட்டியல்ல திறமைகளைத்திறம்பட வெளிப்படுத்தும் ஒரு களம் என்பதை நிறுவனர்கள் விளக்கம் அளித்தனர்.