Home செய்திகள் கலாம் பொன்மொழியில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்..

கலாம் பொன்மொழியில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்..

by ஆசிரியர்

கடந்த வெள்ளிக்கிழமை ராமநாதபுரத்தில் அமைந்துள்ள புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கலாம் இயக்கத்தினர் நிகழ்த்திய வில் ஸ்டேட் ரெக்கார்ட் நிகழ்வு நடைபெற்றது. இந்த சாதனை நிகழ்வில் 645 மாணவ மாணவியர் அப்துல் கலாம் அவர்களின் பொன்மொழிகளையும் எண்ணங்களையும் ஆளுக்கொரு பொன்மொழியாக மேடையில் பதிவு செய்தனர். நொடிகளில் அம் மாணவ மாணவியர் இச்சாதனையை நிகழ்த்தினார்.

இந்த சாதனை நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கலாம் நண்பர்கள் இயக்கத்தினர் செய்திருந்தனர். அப்பள்ளி மாணவ மாணவியர் தங்களின் சிறப்பான ஒத்துழைப்பை சாதனை நிகழ்வு வெற்றி பெற நல்கினர். தமிழகத்தில் மறைந்த மேதகு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் பொன்மொழிகளை மாணவ மாணவியர் ஆளுக்கு ஒரு பொன்மொழி என்கின்ற விகிதத்தில் மேடையில் வாசித்தது இதுவே முதல் முறையாகும்.

இச்சாதனை நிகழ்வை Will Group of Records நிறுவனர் தலைவர் கவிஞர் கலைவாணி மற்றும் செயலர் பானு ஆகியோர் மேற்பார்வை செய்தனர். இதன் தொடர்ச்சியாக 16/10/2018 அன்று புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற அப்துல்கலாம் ஐயா அவர்களின் 87 வது பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்வில் WILL STATE RECORDS அங்கீகாரச் சான்றிதழ் ஆனது கலாம் மாணவர்கள் குழுவிற்கு வழங்கப்பட்டது. அச்சான்றிதழை கலாம் மாணவர்கள் இயக்க தலைவர் விஜயேந்திர ராஜா பெற்றுக்கொண்டார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!