Home செய்திகள் சங்கரன்கோவில் அருகே ரூ.4.61 லட்சம் மதிப்பில் தமிழ்நாடு அரசின் நலத்திட்ட உதவிகள்; மாவட்ட ஆட்சியர் வழங்கினார்..

சங்கரன்கோவில் அருகே ரூ.4.61 லட்சம் மதிப்பில் தமிழ்நாடு அரசின் நலத்திட்ட உதவிகள்; மாவட்ட ஆட்சியர் வழங்கினார்..

by ஆசிரியர்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டத்திற்குட்பட்ட கீழவீரசிகாமணி கிராமத்தில் வைத்து நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 97 பயனாளிகளுக்கு ரூ.4.61 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரன் வழங்கினார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டத்திற்குட்பட்ட கீழவீரசிகாமணி கிராமத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரன் தலைமையில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா முன்னிலையில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது, தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க கடைக்கோடியில் உள்ள ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்து அனைத்து துறை அலுவலர்களும் தமிழ்நாடு அரசின் நலத் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து பொதுமக்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்றைய தினம் கீழவீரசிகாமணி கிராமத்தில் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. மேலும், அனைத்துதுறை அலுவலர்களும் தங்கள் துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து விரைவாக எடுத்துரைத்தார்கள். எனவே நலத்திட்ட உதவிகள் பெற வந்துள்ள பொதுமக்கள் அனைவரும் அலுவலர்கள் எடுத்துரைத்த திட்டங்களை கேட்டறிந்து தங்கள் பகுதியிலுள்ள அனைத்து பொதுமக்களுக்கும் தெரிவித்து பயன்பெற வேண்டும் என பேசினார்.

இம்முகாமில் வருவாய்த் துறையின் மூலம் இலவச பட்டா வழங்கும் திட்டத்தின் கீழ் 17 பயனாளிகளுக்கு ரூ.73,170 மதிப்பிலான இலவச பட்டாவுக்கான ஆணைகளையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 1 பயனாளிக்கு ரூ.1,500 உதவித் தொகையினையும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 17 பயனாளிகளுக்கு ரூ.20,400 முதியோர் உதவி தொகைக்கான ஆணையினையும், வேளாண்மைத் துறையின் மூலம் 1 பயனாளிக்கு ரூ.2,075 மதிப்பிலான பேட்டரி விசைத் தெளிப்பானையும். 1 பயனாளிக்கு ரூ.25,600 மதிப்பிலான மரக்கன்றுகளையும், 1 பயனாளிக்கு ரூ.4000 மதிப்பிலான பயறு ஒண்டர் தெளிப்பு கூலியும், மாவட்ட வேலைவாய்ப்புத் துறையின் மூலம் 22 பயனாளிகளுக்கு ரூ.3,34,800 மதிப்பிலான வேலை வாய்ப்பற்றோர் உதவி தொகைக்கான ஆணையினையும், தோட்டக்கலை துறை மூலம் 3 பயனாளிகளுக்கு தேசிய தோட்டக்கலை இயக்கம் திட்டம் சார்பில் ரூ.90,000 மதிப்பிலான டிராக்டர், உயர் ரக காய்கறி விதைத்தொகுப்பு மற்றும் உதிரி மலர்களையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறையின் மூலம் 4 பயனாளிகளுக்கு ரூ.22,906 மதிப்பிலான மின்மோட்டாருடன் கூடிய இலவச தையல் இயந்திரங்களையும், தேர்தல் விழிப்புணர்வு குறித்த சுவர் இதழ்போட்டியில் வெற்றி பெற்ற 8 மாணவர்களுக்கு நற்சான்றிதழ்களையும், தாட்கோ மூலம் துாய்மை பணியாளர் நலவாரிய உறுப்பினர்கள் அட்டை வழங்கும் திட்டத்தின் கீழ் 22 பயனாளிகளுக்கு நலவாரிய உறுப்பினர் அட்டைகள் என மொத்தம் 97 பயனாளிகளுக்கு ரூ.4.61,545 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.இரவிச்சந்திரன் வழங்கினார்.

முன்னதாக மனுநீதி நாள் முகாமில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலம் தமிழ்நாடு அரசின் திட்டங்கள் குறித்த கண்காட்சியினையும், தோட்டக்கலை துறை வேளாண்மை துறை, மற்றும் பல்வேறு துறைகளின் மூலம் அரசு திட்டங்கள் குறித்து பொது மக்கள் அறிந்து கொண்டு பயன்பெரும் வகையில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியினையும் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டார்கள். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழுத் தலைவர் லாலாசங்கரபாண்டியன் (சங்கரன்கோவில்), ஊராட்சி மன்ற தலைவர் மா.சொள்ளமாடத்தி (கீழவீரசிகாமணி), மாவட்ட வழங்கல் அலுவலர் அனிதா, மாவட்ட மேலாளர் (தாட்கோ) ரமேஷ், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் ஜெயபாரதி மாலதி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தெய்வகுருவம்பள், சங்கரன்கோவில் வருவாய் கோட்டாட்சியர் மரு.சுப்புலெட்சுமி, மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி நல அலுவலர் முருகானந்தம், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா.ராமசுப்பிரமணியன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!