Home செய்திகள் கனவு தேசம்-காஷ்மீர் காவு வாங்கும் மோடி அரசு…. 370 சட்டப்பிரிவு… இன்றைய காஷ்மீரின் நிலவரம் குறித்த வெல்ஃபேர் கட்சி அறிக்கை..

கனவு தேசம்-காஷ்மீர் காவு வாங்கும் மோடி அரசு…. 370 சட்டப்பிரிவு… இன்றைய காஷ்மீரின் நிலவரம் குறித்த வெல்ஃபேர் கட்சி அறிக்கை..

by ஆசிரியர்

கனவு தேசம்-காஷ்மீர் காவு வாங்கும் மோடி அரசு…. 370 சட்டப்பிரிவு… இன்றைய காஷ்மீரின் நிலவரம் குறித்த வெல்ஃபேர் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

பல பேருக்கு காஷ்மீர் என்ற சொர்க்க பூமியை வாழ்நாளில் ஒருமுறையாவது பார்க்கவேண்டும் என்ற ஆவல் இருக்கும். இந்திய சினிமா அதை பெரும்பாலோருக்கு நனவாக்கியிருக்கிறது. இங்கு விவசாயம்தான் பிரதான தொழில். ஆப்பிள், பேரிக்காய், பாதாம், பிஸ்தா, அக்ரூட், பாசுமதி அரிசி மற்றும் குங்குமப் பூ போன்றவை அதிக அளவில் உற்பத்தி ஆவதோடு மட்டுமல்லாது அயல் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால் மாநிலத்தின் பொருளாதாரத்தில் பெரும்பங்கு வகிக்கிறது. கைவிணைப்பொருட்கள் தயாரிப்பது மற்றும் சுற்றுலா மற்றும் படகு வீடுகள் மக்களின் வாழ்வாதாரத்துக்கு முக்கிய ஆதாரமாக விளங்குகிறது. காஷ்மீரும் பல நாடுகளின் எல்லைப்பகுதியில் அமைந்திருப்பதால் அனைவருமே அதை தனதாக்கிக்கொள்ள துடிக்கிறார்கள். ஆனால் காஷ்மீர் இந்தியாவின் ஓர் அங்கம் என்பதில் நமக்கு எந்த ஐயப்பாடும் இல்லை. அது மன்னர் ஹரி சிங் மற்றும் இந்திய அரசு செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 மற்றும் 35A என்ற சங்கிலியால் பிணைக்கப்பட்டு கடந்த 70 ஆண்டுகளாக சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு இந்தியாவோடு இணைந்திருக்கிறது.

ஆனால் இப்பொழுது மேற்கண்ட சட்டப்பிரிவுகள் இந்திய பாராளும்றத்தால் ரத்துசெய்யப்பட்டு, மாநிலம் என்ற தகுதியிலிருந்து இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டுள்ளது உலக அரங்கில் பேசு பொருளாக மாறிஇருக்கிறது. இதனால் இந்தியாவிற்கும் காஷ்மிறுக்குமான இணைப்பு முறிக்கப்பட்தாக மக்கள் ஒருமித்த குரலில் கூறுகிறார்கள். இதன் காரணமாக காஷ்மீர் மாநிலம் முழுவதும் பதட்டமும், அசாதரண சூழலும் நிலவி வருவதாக செய்திகள் வந்தவண்ணமுள்ளது. உண்மை நிலவரத்தை அறிந்து கொள்ளும் பொருட்டு வெல்ஃபேர் கட்சி தேசியத்தலைவர் முனைவர் எஸ் க்யூ ஆர் இலியாஸ் மற்றும் தேசியபொது செயலாளர்கள் திருமதி ஷீமா மோசின், திரு சுப்பிரமணி ஆறுமுகம் ஆகியோர் கொண்ட குழு கடந்த 11 &12 தேதிகளில் இரண்டு நாள் பயணம் மேற்கொண்டது. கடந்த 14 ம்தேதி தில்லி பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஓர் அறிக்கைை வெளியிட்டது.

பயணத்தின் வாயிலாக கிடைத்த தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு ஸ்ரீநகர் வானூர்தி நிலையத்திலருந்து திருப்பி அனுப்பிவிட்டது மத்திய அரசு. ஆனால் நாங்கள் சென்றபோது எந்தொரு தடையும் இல்லாமல் அனுமதிக்கப்பட்டது மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. அங்கு நாம் ஸ்ரீநகர் மற்றும் பாராமுல்லா ஆகிய பகுதிகளில் பலதரப்பட்ட மக்களை சந்தித்து உரையாடினோம். குறிப்பாக பத்திரிக்கையாளர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள்,விவசாயிகள், பெரு வியாபாரிகள், நடைபாதை வியாபாரிகள்,ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுனர்கள்,படகு இல்லம் நடத்துபவர்கள் ஆகியோரை சந்தித்தோம். அனைவருமே ஒருமித்த குரலில் தாங்கள் இந்திய அரசால் ஏமாற்றப்பட்டதாகவும், தங்களை கலந்தாலோசிக்காமல், தங்களுடைய ஒப்புதல் இல்லாமல் சட்டப்பிரிவுகள் 370 மற்றும் 35A வை ரத்து செய்தது மிகுந்த கோபத்தையும் வேதனையையும் அளிப்பதாக கூறினார்கள். இது ஜனநாயக விரோதமானது, அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது, சட்ட விரோதமானது என்று திடமாக நம்புகிறார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை கலைத்துவிட்டு இதை செய்திருப்பதில் மிகப்பெரிய சதி இருப்பதாக நம்புகிறார்கள்.

மத்திய அரசு 90 சதவீத கஷ்மீரிகள் சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவுகள் ரத்தை ஆதரிப்பதாகவும், ராணுவம் விலக்கிக்கொள்ளப்பட்டு ஊரடங்கு உத்தரவு திரும்பப்பெறப்பட்டிருப்தாக அறிவித்திருக்கிறது. ஆனால் உண்மை நிலைமை வேறாக உள்ளது. அங்கு மக்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்யும் பொருட்டு கடைகள் அனைத்தையும் (மருந்துக்கடைகள் விதிவிலக்கு) அடைத்துவைத்து சிவில் ஊரடங்கை கடைபிடிக்கிறார்கள். (a self imposed civil curfew)மக்களுக்கு வேண்டிய அத்தியாவசியப பொருட்களை வாங்குவதற்காக காலையில் ஒரு மணி நேரம் மட்டும் கடைகள் திறக்கிறார்கள். நடைபாதைக்கடைகள் மட்டும் திறந்திருக்கிறது.( பழங்கள், காய்கறிகள், துணிகள் போன்ற பொருட்கள்). இயல்பு நிலை திரும்பிவிட்டது என்று வெளிஉலகிற்கு காட்டுவதற்காக யாரோ அவர்களுக்கு பணம் கொடுத்து கடைகளை திறந்து வைப்பதாக ஒரு குற்றச்சாட்டு நிலவுகிறது.

பள்ளி, கல்லூரிகள் கடந்த 40 நாட்களாக மூடப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் பாடம் நடத்த தயாராக இருந்தபோதும் அரசாங்கம் பொது போக்குவரத்தை முடக்கி வைத்திருப்பதால் மாணவர்கள் பள்ளி கல்கலூரிகளுக்கு வரமுடியாத சூழல் நிலவுகிறது. நவம்பர் மாதம் பள்ளி இறுதித் தேர்வு நடைபெற உள்ள நிலையில் இன்னும் பாடத்திட்டங்களே முழுமையடையாததால் இந்த கல்வி ஆண்டே வீனாகிவிடும் என்ற அச்சத்தில் மாணவர்கள் உள்ளனர்.

கைபேசி சேவை, வலைதலங்கள் அனைத்தும் முடக்கப்பட்டிருப்பதால் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் படிக்கும் தங்களின் பிள்ளைகளை தொடர்பு கொள்ள முடியாமல் பெற்றோர் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டிருப்பதால் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் சுக துக்கங்களில் பங்கு கொள்ளமுடியவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர். லேண்டுலைன் மட்டுமே செயல்படுகிறது, ஆனால் இன்று துரதிரிஸ்டவசமாக அது ஒரு சிலரிடம் மட்டுமே உள்ளது. புறநகர் பகுதிகளில் காவல் அலுவலகத்தில் போய் வரிசையில் நின்றுதான் போன் பேச முடியும். தங்களுக்கு அரசியல் அமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்ட பேச்சுரிமை, கருத்துரிமை, தகவல் தொடர்பு உரிமைகள் பறிக்கப்பட்டதாக கவலைப்படுகிறார்கள்.

செப்டம்பர்- அக்டோபர் மாதங்கள் அறுவடைக்காலம். அறுவடை செய்ய ஆட்கள் இல்லாதது, தகவல் தொலைதொடர்பு துண்டிப்பு, சாலை போக்குவரத்து பாதிப்பு ,வெளியூர் வியாபாரிகள் வராதது போன்ற காரணங்களால் சுமார் எட்டாயிரம் கோடி ரூபாய் ஆப்பிள் வியாபாரம் பாதிக்கபட்டிருப்பதாக சொல்கிறார்கள். பேரிக்காய் அறுவடை செய்யாமல் மரத்திலேயே அழுகிக்கொண்டிருப்பது வேதனை.

அரசியல் கட்சி தலைவர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், மூத்த வழக்கறிஞர்கள், மாணவர் தலைவர்கள் என்று 30 முதல் 40ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு நாட்டின் பல்வேறு மாநில சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இது அவர்களின் ஜனநாயக இடத்தை அரசு அத்துமீறுவதாகவும், இதனால் மிகுந்த குழப்பமும் தங்களின் எதிர்காலம் கேள்விக்குறியானதாக வும் கொந்தளிக்கின்றனர்.

ஊடகங்கள் சரியான முறையில் செயல்படவில்லை என்றும், அவை ஒருதலைப்பட்சமாக உண்மைக்கு மாறான செய்திகளை வெளியிடுவதாகவும் மக்களின் உண்மையான உணர்வுகளை பிரதிபலிப்பதில்லை என்றும் வருத்தப்படுகிறார்கள்.

அரசியல் தலைவர்கள் மற்றும் மற்ற மாநில மக்கள் காஷ்மீர் பெண்களை திருமணம் செய்வது மற்றும் அங்கு சொத்துக்கள் வாங்குவது போன்ற பொறுப்பற்ற பேச்சுகள் அவர்களை மனதளவில் பெரிதும் பாதித்துள்ளது.

பள்ளத்தாக்கில் நிலவும் நிலைமையின் தீவிரத்தன்மை இடத்திற்கு இடம் வேறுபடுகிறது அரசாங்கம் இயல்புநிலை திரும்பிவிட்டது என்று வெளியிடும் தகவல் உண்மைக்கு புறம்பானது மட்டுமல்ல மக்களை திசைதிருப்புவதாகவும் உள்ளது.

வெல்ஃபேர் கட்சி கீழ்கண்ட கண்ட கோரிக்கைகளை மத்திய அரசுக்கு வைக்கிறது. 1. உடனடியாக அரசு மக்களோடு சுமூக பேச்சுவார்த்தை நடத்தி ஊரடங்கு விலக்கிக்கொள்ளப்பட்டு இயல்புநிலை திரும்ப முயற்ச்சி மேற்கொள்ள வேண்டும்.. 2. உடனடியாக கைபேசி, வலைதலம், மற்றும் அனைத்து தகவல் தொடர்புகளையும் வழங்க வேண்டும். 3. இங்கு கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டும். 4. காஷ்மீர் மக்களின் வரலாறு, தனிஅடையாளம், இனம் , இருப்பிடம்மற்றும் கலாச்சாரம் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கை ஏற்படுத்தப்பட்டு அவர்களின் குடியுரிமை நிலைநிறுத்தப்படவேண்டும். 5. பள்ளத்தாக்கில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் உடனடியாக நிறுத்தத்தப்படவேண்டும். 6. இந்தியாவின் மற்றபகுதியில் உள்ள மக்களும் அரசியல் தலைவர்களும் காஷ்மீர் மற்றும் காஷ்மீரிகளைப்பற்றிய தங்களின் ஆத்திரமூட்டும் பொறுப்பற்ற பேச்சுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் 7. காஷ்மீர் மக்களின் இனத்தின் தனித்தன்மை, கலாச்சாரம் மற்றும் .இருப்பிடம் பாதுகாக்கப்பதையும் சட்ட ரீதியிலான உறுதிமொழி வழங்கப்படவேண்டும். 8. அரசாங்கம் உடனடியாக மாநிலத்தின் அனைத்து பங்குதாரர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்துவதின் மூலம் அவர்களின் நம்பிக்கையை வென்று, ஊரடங்கு திரும்பபெற்று உண்மையான இயல்பு நிலை திரும்ப பாடுபடவேண்டும். 9. பள்ளி கல்லூரிகளை உடனடியாக திறந்து மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படாதவகையில் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வெல்ஃபேர் கட்சிமத்திய அரசிடம் விரைவில் மனு அளிப்பது வெல்ஃபேர் பார்ட்டி தீர்மானித்தள்ளது என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!