கீழக்கரை தெற்கு தெரு பகுதியில் குடிநீர் குழாய் பழுதால் வீணாகும் குடிநீர்

கீழக்கரை நகராட்சி மூலம் மிக குறைவான அளவே காவிரி கூட்டுக் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பல தெருக்களில் குடிநீர் சரி வர வரவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் தெற்குத் தெரு இஸ்லாமியா மெட்ரிக் பள்ளியின் பின்புறம் அமைந்திருக்கும் பொது குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள பழுதால் பெருமளவு குடிநீர் வீணாகி, இந்த பகுதி முழுவதும் தண்ணீர் வழிந்தோடியுள்ளது.

தற்காலிகமாக தெற்குத் தெரு கிளை தவ்ஹீத் ஜமாத்தை சேர்ந்த சகோதரர்கள் குழாயில் இருந்து நீர் வெளியேறாதவாறு செய்துள்ளனர். கீழக்கரை நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று இப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.